தேவையான பொருட்கள்:
கடுகு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3-4 (நீளமாக நறுக்கியது)
இங்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெந்தயக்கீரை - 100 கிராம்
பசலைக்கீரை - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
ப்ரஷ் க்ரீம் - 4 டீஸ்பூன்
பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
செய்முறை
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெயை தடவி, அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பசலை மற்றும் வெந்தயக் கீரையை நீரில் நன்கு அலசிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும், 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து, கீரைகளைப் போட்டு 2 நிமிடம் வேக வைத்து, இறக்கி தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒரு முறை அலசி தனியாக வைத்துக் கொள்ளவும்.
*அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பச்சை மிளகாய், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, அரைத்து வைத்துள்ள கீரையை ஊற்ற வேண்டும்.
* பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் கொதிக்க விட்டு, சர்க்கரை, ப்ரஷ் க்ரீம், எலுமிச்சை சாறு மற்றும் கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, வறுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து மீண்டும் 1 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.
* இப்போது அருமையான மேத்தி சமன் என்னும் வெந்தயக்கீரை பன்னீர் ரெசிபி ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.