Author Topic: மிளகாய் சட்னி  (Read 460 times)

Offline kanmani

மிளகாய் சட்னி
« on: October 07, 2013, 08:59:44 AM »
தேவையான பொருட்கள்:

வரமிளகாய் - 4
வெங்காயம்- 1
தக்காளி - 1
பூண்டு - 2 பற்கள்
 புளி - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

 வெங்காயம், தக்காளி, 3 வரமிளகாய், பூண்டு, கொத்தல்லி மற்றும் புளி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் மற்றும் 1 வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான மிளகாய் சட்னி ரெடி!!! இதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

குறிப்பு: இந்த சட்னியில் அனைத்து பொருட்களையும் அரைத்தப் பின்னர், அதனை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுவதற்கு பதிலாக, அரைத்த கலவையில் கடுகு, உளுத்தம் பருப்பை தாளித்து ஊற்றி, அப்படியே இட்லி அல்லது தோசையுடன் சாப்பிடலாம்.