வெண்டைக்காய் - 10
புளி - நெல்லிக்காய் அளவு
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
மல்லித் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் விழுது - கால் தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
சீனி - அரை தேக்கரண்டி
உப்பு - சிறிது
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
வெங்காயம் - சிறிது
பச்சை மிளகாய் - ஒன்று
வெண்டைக்காயை கழுவி துடைத்துவிட்டு தலை மற்றும் வால் பகுதியை நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயைப் பொரித்தெடுக்கவும்.
அரை டம்ளர் தண்ணீரில் புளியைக் கரைத்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
வெண்டைக்காய் பொரித்த எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அதில் புளி, மசாலாக் கலவையை ஊற்றி, வெண்டைக்காயைச் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
வெண்டைக்காய் வெந்து, மசாலாக் கலவை கெட்டியானதும் சீனி சேர்த்து சிறிது நேரம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
புளிப்பு, இனிப்பு மற்றும் காரச் சுவையுடன் வெண்டைக்காய் பச்சடி தயார். இதை பிரியாணி, நெய் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.