Author Topic: கத்தரிக்காய் கடலைக்குழம்பு  (Read 467 times)

Offline kanmani


    கத்தரிக்காய் - 250 கிராம்
    கொண்டைக்கடலை - அரை கப்
    புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
    கெட்டித் தேங்காய்ப்பால் - கால் கப்
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (கலவை தூள்)
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    சீனி - அரை தேக்கரண்டி
    சின்ன வெங்காயம் - கால் கப்
    பூண்டு - 5 பல்
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 3
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எள் - ஒரு தேக்கரண்டி
    சோம்பு - அரை தேக்கரண்டி
    தாளிக்க:
    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு - அரை தேக்கரண்டி
    வெந்தயம் - அரை தேக்கரண்டி

 

 
   

கத்தரிக்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்துக் கொள்ளவும். கொண்டைக்கடலையை 6 மணி நேரம் ஊறவைத்து, பிறகு அதை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். எள்ளையும், சோம்பையும் சிவக்க வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அரை கப் தண்ணீரில் புளியைக் கரைத்து வைக்கவும்.
   

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கிக் கொள்ளவும்.
   

தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, புளிக்கரைசலை ஊற்றி எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிடவும்.
   

அதனுடன் தேங்காய் பால் மற்றும் சீனி சேர்த்து கொதிக்கவிடவும்.
   

கொதித்ததும் பொரித்து வைத்துள்ள கத்தரிக்காய் மற்றும் வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து வேகவிடவும்.
   

அனைத்தும் சேர்ந்து குழம்பு கெட்டியானதும், பொடித்து வைத்துள்ள பொடியைத் தூவி இறக்கவும்.
   

சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையான கத்தரிக்காய் கடலைக்குழம்பு தயார்.