என்னென்ன தேவை?
கோதுமை மாவு - 1 கப்,
வெல்லப் பாகு - அரை கப்,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
நெய் - சிறிதளவு.
எப்படிச் செய்வது?
கோதுமை மாவை வெறும் கடாயில் லேசாக வறுக்கவும். வெல்லத்தில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரைந்ததும், வடிகட்டி, பாகு எடுத்து வைக்கவும். தேங்காயை நெய்யில் வதக்கி வைக்கவும். கோதுமை மாவில், ஏலக்காய் தூள், வெல்லப்பாகு, தேங்காய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அதை கொழுக்கட்டை மாதிரி பிடித்தோ, உருட்டியோ ஆவியில் வேக வைத்து அப்படியே பரிமாறவும்