என்னென்ன தேவை?
ஆப்பிள் - 2,
ஓட்ஸ் - அரை கப்,
பால் - 2 கப்,
தேன் - 1 டீஸ்பூன்,
சர்க்கரை - சுவைக்கேற்ப,
நட்ஸ் - அலங்கரிக்க.
எப்படிச் செய்வது?
ஆப்பிளை கழுவி, தோல் நீக்கி, துண்டு களாக வெட் டவும். அத்துடன் ஓட்ஸ், பால், தேன், சர்க்கரை சேர்த்து மிக்சியில் மிருதுவாக அடிக்கவும். ரொம்பவும் கெட்டியாக இருந்தால் மேலும் சிறிது பால் சேர்த்துக் கொள்ளலாம். பொடித்த நட்ஸ் தூவிப் பரிமாறவும்.