உன் பேச்சுக்கு மறு பேச்சு
பேசத் தான் முடியவில்லை
என்ன மாயம் செய்தாயோ
என்னை வாயடைக்க வைத்தாயோ
உள்ள மெங்கும் உன் நினைவு
உறங்கும் போதும் பிரிவதில்லை
உனக்கு என்று புரியுமென்று
எனக்கும் அது தெரியவில்லை
உன் அகம் பார்க்க எந்தனுக்கு
உன் முகம் பார்க்க துடிக்குதடி
வாடாமல் வாடுகிறேன்
வாழ்வு அளிக்க வருவாயோ
வழி மீது விழி வைத்து
காத்திருப்பேன் உனக்காக.....ஆம் காத்திருக்கிறேன் உனக்காக மட்டும்..............