Author Topic: ~ எளிய இயகை வைத்தியம்:- ~  (Read 479 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226417
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ எளிய இயகை வைத்தியம்:- ~
« on: October 04, 2013, 06:25:37 PM »
எளிய இயகை வைத்தியம்:-




* வெங்காயம் ஓர் அருமருந்து. பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீர்படும். வழக்கமாக வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் முடக்கு வாத நரம்பு நோய்கள் தாக்காமல் தடுக்கும்.

* தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று வந்தால் தொண்டையில் சதை ஏற்படாமல் தடுக்கும். தொண்டைப்புண்ணும் ஆறும்.

* காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் சோகை நோய்க்கு மருந்தே தேவையில்லை.

* விவசாயிகளுக்கும், சலவைத் தொழிலாளிகளுக்கும் தண்ணீரில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கும் சாதாரணமாக வரக்கூடிய நோயான சேற்றுப்புண்ணிற்கு கால்களை ஈரம் போகத் துடைத்துவிட்டு மஞ்சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப்புண் ஆறும்.

* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக் கிருமிகள் செத்துப் போகும். பற்கள் எனாமல் சிதையாமல் இருக்கும்.

* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். மூளை உற்சாகத்துடன் இருக்கும்.

* பெருங்காயத்தைத் தினமும் ஒருவேளையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாயுவை வெளியேற்றுவதில் பெருங்காயம் பெரும்பங்கு வகிக்கிறது.

* கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு மட்டும் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

* தோல் வியாதிகள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். கொத்துமல்லி இலையை நன்றாக அரைத்து சொரசொரப்பான இடத்தில் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே தோல் மிருதுவாகும்.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* வாய்ப் புண் வந்தவருக்குப் பகை காரம். முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறுசிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதியை போக்கும். தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்