அழகாக பேசினாய்
ஆறுதலாக பேசினாய்
ஆதரவாக பேசினாய்
அனுசரணையாய் பேசினாய்
அன்போடு பேசினாய்
காதலோடு பேசினாய்
பேசினாய் பேசினாய்
வார்த்தைகளால் விவரிக்க
முடியாத அளவு நேசமாய்
பேசினாய்
பேசி பேசியே என் உயிர் வரை
சென்றாய்
அதனால் தானோ என்னவோ
என் காதலான உயிரையும்
காய படுத்தி கொண்டிருக்கிறாய்