ஆறுதலாய்..!
தோள் சாயத் தோழன் இல்லை..
துன்பத்தில்.. துவண்டு வீழ்கையில்..
தாங்கித் தோள் கொடுக்க தோழன் இல்லை..
இரவில்..
கண்ணீரால் என் தலையணையை நனைக்கின்றேன்..
என் கவிதையில்..
என் கண்ணீருக்கு உருவம் அளிகின்றேன்..!
என் நட்பின் ஆழத்தை..
உன் பிரிவின் வலியை..
என் கண்ணீரில் கரையும் கவிதையின் மூலம்..
உன் மனதின் மூலையிலேனும்.
உணர்த்தத் துடிகின்றேனடா..!
என் அன்புத் தோழா..!!
என்றேனும் என் நட்பின் ஆழம்..
உன்னை எனிடம் சேர்க்கும்..
நம் நட்பை..
அதன் இனியத் தருணங்களைவிட..
என் மனதை அறுக்கும் .. உன் பிரிவையே..
என்னில் சுமப்பேன்..!!
ஏனெனில்..
உன் பிரிவின் வலியால்..
உனக்காகத் துடித்து அழும் தருணம்..
என் உயிர் பிரியத் துடிகின்றேன்..!!
என் நட்பின் ஆழத்தை..
நன் உன்மேல் கொண்ட தோழமையின் தூய்மையை..
அப்போதேனும் நீ உணர்வாயென..!!!
என் அன்புத் தோழா..!!
இதோ என் பிரிவின் சிறு பகுதியை உணர்த்த..
என் கவி வரிகள் உனக்காக..
நீ ஏற்படுத்திய காயத்திற்காக..!!