அன்பில் அமுதசுரபியாய்
நீ காட்டிய பாசம்
மறக்க முடியவில்லை..
உன் விரல்பிடித்து
கனவில் நடந்த நாட்கள்
மறக்க முடியவில்லை..
ஆசைஆசையாய்
நீ பேசிய வார்த்தைகளை
மறக்க முடியவில்லை..
மடியமர்த்தி நீ சொன்ன
அறிவுரைகளை
மறக்க முடியவில்லை
அமுதமாய் நீ கொடுத்த
முத்தத்தை
மறக்க முடியவில்லை
தளராமல் உழைக்கும்
உன் சுறுசுறுப்பை
மறக்க முடியவில்லை
மறுபிறவி உண்டென்று
நீ சொன்னதும்
மறக்க முடியவில்லை..
அது உண்மையெனில்..
இப் பிறவிலாவது என்னோடு
நீ வேண்டும்
என்னவனே ……