Author Topic: ~ விஷம் முறிக்கும் பிரமத்தண்டு! (Argemone mexicana Linn, Papaveraceae) ~  (Read 499 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
விஷம் முறிக்கும் பிரமத்தண்டு!
(Argemone mexicana Linn, Papaveraceae)





பிரமத்தண்டு, அடிபாகத்தில் இருந்து நுனிப்பாகம் வரை சாம்பல் நிறத்தில் பூத்தாற்போல இருக்கும். இலைகள் சொரசொரப்போடு இலைகளின் ஓரங்களில் மிகவும் கூர்மையான முட்கள் அமைந்திருக்கும். காம்பில்லாமல் பல மடல்களாலான உடைந்த இலைகள் இருக்கும். பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையும் கடுகு போன்ற விதைகளையும் உடைய நேராக வளரும் சிறு செடி இனமாகும்.

இலை, பால், வேர், விதை மருத்துவக் குணம் உடையது. நோயை முறித்து உடலைத் தேற்றவும், நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். தமிழகம் முழுதும் தரிசு நிலங்களிலும், ஆற்றங் கரைகளிலும், சாலை ஓரங்களிலும் தானாகவே வளர்கிறது.

வேறு பெயர்கள்: குறுக்குச் செடி, குடியோட்டிப் பூண்டு, குருக்கம், ததூரி, குடிவோட்டுப் பூண்டு, பிறத்தியுபுசுப்பி, பிரம்மதண்டி, வனமாலி, வாராகுகா, சுவாறகு, முகிக்கதசத்தை, ரசதூடு, பசயந்தனி, சாதலிங்கத்தை குருவாக்கி, கிறுமி அரி.

மருத்துவ குணங்கள்:

பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள், குட்டம் குணமாகும்.

பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ கடுப்பு நீங்கும்.
பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக் கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட பேதியாகி பாம்பு விஷம் இறங்கும்.

பிரமத் தண்டு இலையை அரைத்துக் கட்டிவரக் கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு, உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் குணமாகும். 20 பூக்களை எடுத்து நீரில் ஊற வைத்து குளித்து வர 50 நாட்களில் கண் நோய் குணமாகும்.

பிரமத்தண்டு பால் 1 துளி கண்ணில் விட்டு வரக் கண் வலி, சதை வளர்தல், கண் சிவத்தல், அரிப்பு, கண் கூச்சம், நீர் வடிதல், கண் எரிச்சல் குணமாகும். இலை சூரணம், விதை சூரணம் சேர்த்து மிளகளவு 2 வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர சயம், இருமல், நுரையீரல், சளி இருமல் குணமாகும்.

பிரமத்தண்டின் மூலச் சாம்பல் மிளகு அளவு எடுத்து சிறிது தேனில் 2 வேளை சாப்பிட்டு வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), காசம், கப நோய், நுரையீரல் நோய் குணமாகும்.

பிரமத் தண்டின் மூலச் சாம்பலால் பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் சொத்தை, சீழ்வடிதல், பல் கரைதல் குணமாகும்.

பிரமத்தண்டின் வேரை நிழலில் உலர்த்தி காய வைத்து இடித்துப் பொடியாக்கி சுண்டைக்காய் அளவு வெந்நீரில் சாப்பிட மலப் புழுக்கள் வெளியேறும்.

பிரமத்தண்டு விதைகள் முழுவதையும் நீக்கிவிட்டு செடிகள் முழுவதையும் சுத்தம் செய்து சாறு பிழிந்து 12 வயது வரை 1/2 தேக்கரண்டி அளவிலும் அதற்கு மேல் 1 தேக்கரண்டியளவிலும் குடிக்கக் கொடுக்க எல்லா விதமான விஷங்களும் பேதியாகி முறிந்துவிடும். அதிகம் பேதியானால் எலுமிச்சைச் சாறு கொடுக்கலாம். மிகவும் களைப்பாக இருந்தால் அரை அரிசி (குருணை) உணவு கொடுக்கலாம். இதைப் பாம்பு கடிக்கு மட்டும் கொடுத்தால் நல்லது. மற்ற விஷங்களுக்குக் கடிவாயில் சாற்றை விட்டு வந்தால் விஷம் தலைக் கேறாமல் முறியும்.

பிரமத் தண்டின் விதையை எடுத்து வந்து நீர்விட்டு அரைத்து கட்டியின் மேல் ஒரு புளிய இலை களத்துக்குப் பூசிவிடவும். 2 மணிக்கு ஒரு முறை புதிதாக செய்து வர கட்டி தானாக உருண்டு பழுத்து உடைந்து விடும்.

பிரமத் தண்டின் விதையை பொடி செய்து இலையில் சுருட்டிப் பீடி குடுப்பது போல புகையை இழுத்து வெளியில் விடப் பல்வலி, பற் சொத்தை, புழுக்கள் வெளியேறும். — with Umarani Rani, Anis Bharathy, Karthick Gokul Rocking, Rajesh Kumar and ஜோதிடகலை ஜோதிட பயிற்சி.