Author Topic: வெஜிடபிள்ஸ் இன் ஹாட் சிஸ்லர்ஸ்  (Read 420 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

பனீர் - 300 கிராம்,
வெங்காயம் - 2,
கேரட் - 2,
குடமிளகாய் - 2, காலி
ஃப்ளவர் - 2 துண்டுகள்,
பொடியாக நறுக்கிய இஞ்சி,
பூண்டு, பச்சைமிளகாய் - தலா 1 டீஸ்பூன், 
சோயா - 1 டீஸ்பூன்,
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்,
வினிகர் - அரை டீஸ்பூன்,
அஜினோமோட்டோ - ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
கார்ன் ஃப்ளார், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
விருப்பப்பட்டால் ஒயிட் ஒயின் - 1 டீஸ்பூன்,
வெங்காயத்தாள் - சிறிது.
எப்படிச் செய்வது? 

பனீர், குடமிளகாய், காலிஃப்ளவர், கேரட் எல்லாவற்றையும் சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக  நறுக்கவும். ஒரு கடாயில் (நான் ஸ்டிக் பேன்)  தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இத்துடன் வெங்காயம், மற்ற  காய்கள் சேர்த்து வதக்கி, காய்கள் முக்கால் பாகம் வெந்ததும் சர்க்கரை, உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், அஜினோமோட்டோ, வினிகர், பனீர், ஒயிட்  ஒயின்  சேர்த்து வதக்கி இறக்குவதற்கு முன் கார்ன் ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கிளறி பனீர் உடையாமல் இறக்கவும்.  சிஸ்லர்ஸை அடுப்பின் மேல் வைத்து சூடாக்கி,  காய்கறிக் கலவையை அதன் மேல் கொட்டி, 1 டீஸ்பூன் நெய் விட்டு, புகை வரும் போது வெங்காயத்  தாள் கொண்டு அலங்கரித்து அப்படியே பரிமாறவும். (சிஸ்லர்ஸ் என்பது ஒரு விதமான கடாய். பெரிய பாத்திரக் கடைகளில் கிடைக்கும்.)