உன்னை விட்டு பிரிந்துவிட்டேன்
என்று கனவில் கூட நினைத்துவிடாதே
நான் என்றுமே உனக்கு நிழல் தரும் ஆலமரமடி
இன்று என் தேவை உனக்கில்லாமல் போனது
என் மதிப்பும் உனக்கு புரியாமல் போனது
என் மடி சாய்ந்து கண்ணீர் விட
என்றோ ஒரு நாள் வருவாய் நீ
அன்றும் இதே மனதோடு காத்திருப்பேன்
எனக்கு என்றுமே நீ என் உயிர் தானடி
உனை எப்படி வெறுத்து ஒதுக்குவேன் நான்
என்னில் ஆணி வேரே நீ தானடி..................என்றும் அன்புடன் அருள்