Author Topic: ~ காஷ்மீரி ரேஷ்மி பனீர் ~  (Read 408 times)

Offline MysteRy

~ காஷ்மீரி ரேஷ்மி பனீர் ~
« on: September 26, 2013, 08:11:06 PM »
காஷ்மீரி ரேஷ்மி பனீர்


தேவையானவை:
பனீர் - 200 கிராம், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், முந்திரிப் பருப்பு - 10, பச்சை மிளகாய் - 4, ஏலக்காய் - 2, சர்க்கரை - அரை டீஸ்பூன், கெட்டியான தயிர் - அரை கப், பால் - தேவைக்கேற்ப, காஷ்மீரி கரம் மசாலா - 2 டீஸ்பூன், வெங்காயம் - 2, கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கப், வெண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
காஷ்மீரி கரம் மசாலாவுக்கு: சீரகம், சோம்பு - தலா அரை கப், காஷ்மீரி மிளகாய் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 8, கிராம்பு - 4, பட்டை - சிறு துண்டு, வெந்தயம் - கால் டீஸ்பூன், ஜாதிக்காய் - சிறு துண்டு, கறுப்பு ஏலக்காய் - 4 (இவற்றை வறுத்து கொரகொரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளவும்).

செய்முறை:
பனீரை சதுர துண்டுகளாக அரியவும். இளம் சூடான தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்து, பனீர் துண்டுகளை ஊற வைக்கவும். கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், ஏலக்காய், சர்க்கரை, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, கெட்டியான தயிர் சேர்த்து அரைக்கவும். (தண்ணீர் சேர்க்கக் கூடாது).
கடாயில் வெண்ணெய் சேர்த்து, சீரகம் தாளிக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து வதக்கவும். அரைத்த கொத்தமல்லிக் கலவை, பனீர் துண்டுகள், உப்பு, 2 டீஸ்பூன் காஷ்மீரி கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். தேவையான பால் ஊற்றி தளர்த்தவும். கொதித்ததும் அடுப்பை அணைத்து பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி, மேலாக கெட்டியான பால் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.