Author Topic: ~ 30 வகை சுண்டல் ~  (Read 1926 times)

Offline MysteRy

~ 30 வகை சுண்டல் ~
« on: September 26, 2013, 11:57:43 AM »
காராமணி இனிப்பு சுண்டல்




தேவையானவை:
சிவப்பு காராமணி - ஒரு கப், பாகு வெல்லம் (பொடித்தது) - ஒரு கப், வறுத்துப் பொடித்த எள் - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: 
சிவப்பு காராமணியை வறுத்து, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து சிறிது கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். இதை வெந்த காராமணியுடன் சேர்த்து... எள்ளுப் பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்தால்... காராமணி இனிப்பு சுண்டல் தயார்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #1 on: September 26, 2013, 11:59:48 AM »
கடலைப்பருப்பு சுண்டல்




தேவையானவை:
கடலைப்பருப்பு - 200 கிராம், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு... வேக வைத்த கடலைப்பருப்பை தண்ணீர் வடித்து சேர்த்து, உப்பு, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #2 on: September 26, 2013, 12:01:30 PM »
பார்லி  சாபுதானா சுண்டல்




தேவையானவை:
பார்லி, ஜவ்வரிசி, வறுத்த வேர்க்கடலை - தலா 100 கிராம், பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு, பிஸ்தா பருப்பு - தலா 10, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
பார்லி, ஜவ்வரிசியை நன்கு ஊற வைத்து, தண்ணீர் வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சி விழுது, மிளகுத்தூள் சேர்த்து, ஊற வைத்த பார்லி, ஜவ்வரிசி, உப்பு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பிஸ்தா, பொட்டுக்கடலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #3 on: September 26, 2013, 12:03:06 PM »
பச்சைப் பட்டாணி சுண்டல்




தேவையானவை:
பச்சைப் பட்டாணி - 200 கிராம், துருவிய கேரட் - 2 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - ஒரு தலா டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று.

செய்முறை: 
தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்து வைக்கவும். பச்சைப் பட்டாணியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து... குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வேக வைத்த பட்டாணியை தண்ணீர் வடித்து சேர்க்கவும். இதனுடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து, வறுத்துப் பொடித்ததையும் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லியைத் தூவி கலந்து பரிமாறவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #4 on: September 26, 2013, 12:04:42 PM »
வேர்க்கடலை சுண்டல்




தேவையானவை:
பச்சை வேர்க்கடலை - 200 கிராம், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - தலா ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
வேர்க்கடலையுடன் உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து... வேக வைத்த கடலையை தண்ணீர் வடித்து சேர்த்து, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #5 on: September 26, 2013, 12:06:09 PM »
பயறு இனிப்பு சுண்டல்




தேவையானவை:
பச்சைப் பயறு - 200 கிராம், வெல்லம் - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்.

செய்முறை: 
பச்சைப் பயறை லேசாக வறுத்து, 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தைப் பொடித்து, நீரில் கரைத்து சிறிது கொதிக்க வைத்து, வடிகட்டி, மீண்டும் அடிப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும். பாகு கெட்டியானதும் வேக வைத்த பயறை தண்ணீர் வடித்து சேர்த்து, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #6 on: September 26, 2013, 12:07:46 PM »
பாசிப்பருப்பு கார சுண்டல்




தேவையானவை:
பாசிப்பருப்பு - 200 கிராம், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து, வெடித்ததும் பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த பாசிப்பருப்பை தண்ணீர் வடித்து சேர்க்கவும். பிறகு உப்பு, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #7 on: September 26, 2013, 12:10:15 PM »
ஃப்ரூட் சுண்டல்




தேவையானவை:
முளைகட்டிய சோளம், கொய்யாபழத் துண்டுகள், ஆப்பிள் துண்டுகள், பப்பாளிப்பழத் துண்டுகள் - தலா ஒரு கப், உலர் திராட்சை - 10.

செய்முறை: 
முளைகட்டிய சோளத்துடன் நறுக்கிய கொய்யாப்பழத் துண்டுகள், ஆப்பிள் துண்டுகள், பப்பாளி பழத் துண்டுகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உலர் திராட்சையையும் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு:
சுலபமாக செய்யக்கூடிய இந்த சுண்டலில் ருசியும், சத்தும் ஏராளம்!

Offline MysteRy

Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #8 on: September 26, 2013, 12:11:45 PM »
ரங்கோலி சுண்டல்




தேவையானவை:
பச்சைப் பட்டாணி, முளைகட்டிய சோளம், சோயா - தலா ஒரு கப், கேரட் துருவல் - 4 டீஸ்பூன், மாங்காய் (துருவியது) - 2 டீஸ்பூன், இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
சோளம், பட்டாணி, சோயா எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து குக்கரில் வைத்து, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கி, தண்ணீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இஞ்சி விழுது, மாங்காய் துருவல், கேரட் துருவல், வேக வைத்த சோளம், பட்டாணி, சோயா சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லியை மேலே தூவினால்... ரங்கோலி சுண்டல் ரெடி!

Offline MysteRy

Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #9 on: September 26, 2013, 12:13:21 PM »
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்




தேவையானவை:
வெள்ளை கொண்டைக்கடலை - 200 கிராம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை: 
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊற வைக்கவும். காலையில் நன்றாகக் களைந்து, குக்கரில் வைத்து தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். வெறும் வாணலியில் தனியா, காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பை வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வேக வைத்த கடலையை தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு சேர்த்து, வெடித்ததும் வேக வைத்த கொண்டைக்கடலையைப் போட்டுக் கிளறி, அரைத்த பொடியை சேர்த்து... பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #10 on: September 26, 2013, 01:43:48 PM »
பயறு  பனீர் சுண்டல்




தேவையானவை:
முளைகட்டிய பச்சைப் பயறு - 2 கப், பனீர் - 10 துண்டுகள், கேரட் துருவல் - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
முளைகட்டிய பச்சைப் பயறுடன், கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பனீர் துண்டுகளை நெய்யில் பொரித்து இதனுடன் சேர்த்து, மிளகுத்தூள் போட்டு நன்றாகக் கலக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #11 on: September 26, 2013, 01:45:16 PM »
புதினா  கொத்தமல்லி சுண்டல்




தேவையானவை:
புதினா - ஒரு கட்டு, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய கோஸ் - ஒரு கப், வேக வைத்த வேர்க்கடலை - ஒரு கப், முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப்,  மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
புதினாவை ஆய்ந்து நறுக்கவும். கடாயில் நெய் விட்டு புதினா,கோஸ், கொத்தமல்லி சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும். பிறகு, வேக வைத்த வேர்க்கடலை, முளைகட்டிய பச்சைப் பயறு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #12 on: September 26, 2013, 01:49:48 PM »
நெய் அப்பம்




தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப், நெய் - 100 மில்லி, தேங்காய் துருவல் - ஒரு கப், அரிசி - 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு கப் ஏலக்காய் - 4.

செய்முறை: 
தேங்காய் துருவல், அரிசி, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து, ஏலக்காயை உரித்துப் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதை கோதுமை மாவுடன் கலந்து, தோசை மாவு பதத்தில் கரைக்கவும். ஆப்பக் கல்லில் நெய் விட்டு, மாவை சிறு கரண்டியில் எடுத்து ஊற்றி, வெந்தவுடன் திருப்பிப் போட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:
நவராத்திரி பூஜையில் நெய் அப்பத்துக்கு முக்கிய இடம் உண்டு.

Offline MysteRy

Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #13 on: September 26, 2013, 01:52:08 PM »
மொச்சை சுண்டல்




தேவையானவை:
காய்ந்த மொச்சை - 250 கிராம், தனியா, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
மொச்சையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். மொச்சையை தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, இஞ்சி விழுதை போட்டு, வேக வைத்த மொச்சையையும் தண்ணீர் வடித்து சேர்க்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், பொடித்து வைத்த பொடி, கறிவேப்பிலை போட்டு நன்கு கிளறி, இறக்கும் சமயம் கொப்பரைத் துருவல் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

குறிப்பு:
தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை மொத்தமாக பொடித்து வைத்துக்கொண்டும் சுண்டலுக்கு தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

Offline MysteRy

Re: ~ 30 வகை சுண்டல் ~
« Reply #14 on: September 26, 2013, 01:53:49 PM »
மல்டி பருப்பு சுண்டல்




தேவையானவை:
கடலைப்பருப்பு, பச்சை வேர்க்கடலை, முளைகட்டிய கொள்ளு - தலா ஒரு கப், எள்ளு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
கடலைப்பருப்பு, கொள்ளு, வேர்க்கடலையுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். எள்ளு, காய்ந்த மிளகாயை வறுத்துப் பொடிக்கவும். வேக வைத்த கொள்ளு, கடலைப்பருப்பு, வேர்க்கடலையில் இருந்து தண்ணீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, எள்ளு - மிளகாய் பொடி, வேக வைத்த பருப்புகள் சேர்த்துக் கிளறவும். அதனுடன் கொப்பரைத் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.