பரங்கிக்காய் - 250 கிராம்
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 3 பல்
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
மல்லித் தழை, கறிவேப்பிலை
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
பரங்கிக்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அதனுடன் தக்காளி மற்றும் மல்லித் தழை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் பரங்கிக்காய், உப்பு மற்றும் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.
பரங்கிக்காய் வதங்கியதும், தண்ணீர் தெளித்து, மூடி போட்டு குழைய வேகவிட்டு இறக்கவும்.
சாதத்துடன் பிசைந்து சாப்பிட, சுவையான பரங்கிக்காய் மசியல் தயார்.