நினைவால் உன்னை
நெருங்கி வாழ்கிறேன்..
கனவால் உன்னில்
கரைந்து போகிறேன்..
என்னை தொலைத்துவிட்டு
உன்னில் தேடிக்கொண்டிருக்கிறேன்..
என் இதயமாக
என் இதயத்துள் வாசம் செய்ய
வந்தவன் நீ
என் இதயத்தை
காயபடுத்துபவனும்
நீ ...
என் விழியாக இருபவனும் நீ
என் விழியில் கண்ணீரை வர வைப்பவனும்
நீ ...
என் சுவாசமாக இருபவனும் நீ
என் சுவாசத்தை தடை போடுபவனும்
நீ
என் உயிரானவனும் நீ
என் உயிரை வதைப்பவனும்
நீ ..
இது புரிந்தும் கை கட்டி
வாய் பேசா உமையாக
வேடிக்கை பார்ப்பவள் நான்
என்னை வாழ வைப்பதும்
வீழ வைப்பதும் உன்னால்
மட்டுமே சாத்தியம் என்பதால்....