உன் வார்த்தைகள் அனைத்தும்
வேதமாய் வாழ்ந்த ஒரு உயிர்
இன்று ஏங்கியே துடிக்குதடி
உன் வார்த்தை கேட்க
ஏனோ என் மேல் கோபத்தை
மழையாய் பொழிகிறாய்
எரிகிறது என் உடலெங்கும்
கொதிக்கிறது உள்ளமெங்கும்
எண்ணங்கள் மாறு பட்டு
எதிரிகளால் சூழப்பட்டு
நமக்குள் வேறுபட்டு
போனோமே மனதில் காயப்பட்டு
உன் கோபதுக்கு கட்டுப்பட்டு
நான் போகிறேனே உன்னை விட்டுவிட்டு
என் உயிரை கொன்று விட்டு
செல்கிறேன் உன் நினைவுகளோடு...................ஆம் நினைவுகளோடு மட்டும் செல்கிறேன்....