Author Topic: ~ 30 வகை வடை-பாயசம்-கொழுக்கட்டை ~  (Read 2554 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28908
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முப்பருப்பு வடை




தேவையானவை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுந்து - தலா கால் கப், சோம்பு - அரை டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து, தோல் சீவிக் கொள்ளவும்), மிளகு - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: 
மூன்று பருப்புகளையும் ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு, நீரை வடித்துவிட்டு, இஞ்சி, சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28908
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பார்லி வடை




தேவையானவை:
பார்லி - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2, கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4,  கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.   

செய்முறை: 
பார்லியை 6-8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதை பிரஷர் குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியை சூடாக்கி, அதில் வெந்த பார்லி, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, கடலை மாவு சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து... அதனுடன் அரைத்த பார்லி கலவை, உப்பு, நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28908
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வேர்க்கடலை வடை




தேவையானவை:
பச்சை வேர்க்கடலை - ஒரு கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, வெங்காயம் - ஒன்று, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. 

செய்முறை: 
வேர்க்கடலையை அரை மணி நேரம் ஊறவிடவும். நீரை பிழிந்துவிட்டு, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும். மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28908
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சென்னா வடை




தேவையானவை:
சென்னா (கொண்டைக்கடலை) - ஒரு கப், இஞ்சி - சிறிய துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன், மிளகு - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, புதினா - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
கொண்டைக்கடலையை 6-8 மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, மிளகு, புதினா, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும் (தேவைப்பட்டால் 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்க்கவும்). அரைத்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால்... சென்னா வடை தயார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28908
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தட்டைப் பயறு வடை




தேவையானவை:
வெள்ளை தட்டைப் பயறு - ஒரு கப், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, சீரகம் - கால் டீஸ்பூன், புதினா - சிறிதளவு,  வெங்காயம் - ஒன்று, எண் ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
தட்டைப் பயறை 6 மணி நேரம் ஊற விடவும். நீரை வடித்துவிட்டு உப்பு, பச்சை மிளகாய், சீரகம், தோல் சீவிய இஞ்சி, புதினா சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். மாவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28908
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பட்டாணி வடை




தேவையானவை:
பச்சைப் பட்டாணி (உரித்தது) - ஒரு கப் (காய்ந்த பட்டாணி எனில் ஒன்றரை கப்), கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: 
பட்டா ணியுடன் (காய்ந்த பட்டாணியில் செய்வதாக இருந்தால் 8 மணி நேரம் ஊற வைக்கவும். பச்சைப் பட்டாணி என்றால், ஊற வைக்க வேண்டாம்) தோல் சீவிய இஞ்சி, சோம்பு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து அரைக்கவும். அதனுடன் கடலை மாவு, உப்பு சேர்த்து, வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, ஆறவிடவும். ஆறிய விழுதை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28908
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஸ்டப்ஃடு வடை




தேவையானவை:
உருளைக் கிழங்கு - 2, முந்திரி, பாதாம், திராட்சை (சேர்த்து) - கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பேரீச்சை - கால் கப், சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
 உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். முந்திரி, பாதாம், திராட்சையை பொடியாக நறுக்கவும். பேரீச்சையை நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்குடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். பிசைந்த உருளைக்கிழங்கை சிறிய செப்பு போல் செய்து... முந்திரி, பாதாம், திராட்சை, பேரீச்சையை வைத்து மூடி, சோள மாவில் புரட்டி, வடை போல் தட்டி, சூடான தவாவில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால்... ஸ்டஃப்டு வடை தயார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28908
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கீரை வடை




தேவையானவை:
கடலைப்பருப்பு - ஒரு கப், சுத்தம் செய்து நறுக்கிய முளைக்கீரை - கால் கப், சோம்பு - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
கடலைப்பருப்பை முக்கால் மணி நேரம் ஊறவிடவும். பிறகு, நீரை வடித்துவிட்டு, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய கீரை சேர்த்துக் கலக்கி, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28908
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஸ்வீட் கார்ன் வடை




தேவையானவை:
ஸ்வீட் கார்ன் - 2 கப், இஞ்சி - சிறிய துண்டு, சீரகம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, வெங்காயம் - ஒன்று, புதினா - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
 உரித்த ஸ்வீட் கார்ன் முத்துக்களுடன் தோல் சீவிய இஞ்சி, சீரகம், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில் வெங்காயம், புதினா சேர்த்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28908
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பொட்டுக்கடலை வடை




தேவையானவை:
பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
பொட்டுக்கடலை மாவுடன், உப்பு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்துப் பிசிறி, சிறிது சிறிதாக நீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28908
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சர்க்கரைவள்ளிக் கிழங்கு வடை




தேவையானவை:
வேக வைத்து, மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, பச்சை மிளகாய் - 3 (நறுக்கிக் கொள்ளவும்), கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உப்பு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, கடலை மாவு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இந்தக் கலவையை ஆறியவுடன் வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொரித்தெடுக்கவும். இதை தோசைக்கல்லில் போட்டும் சுட்டு எடுக்கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28908
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பச்சைப் பயறு வடை




தேவையானவை:
பச்சைப் பயறு - ஒரு கப், பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, மிளகு, சோம்பு - தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
பச்சைப் பயறை 2-3 மணி நேரம் ஊறவிடவும். பச்சரிசியை தனியே அரை மணி நேரம் ஊறவிடவும். பின்னர் நீரை வடித்து, பயறு, அரிசி ஆகியவற்றை ஒன்றுசேர்த்து... தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, சோம்பு, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28908
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அம்மணி கொழுக்கட்டை




தேவையானவை:
பச்சரிசி மாவு - 100 கிராம், இட்லி மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
ஒரு பங்கு அரிசி மாவுக்கு, ஒரு பங்கு என சம அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து மாவைத் தூவி கெட்டியாகக் கிளறவும். கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து மாவுடன் சேர்க்கவும். தேங்காய் துருவல் மற்றும் இட்லி மிளகாய்ப் பொடியையும் போட்டு பிசைந்து, சீடை போல உருட்டி இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு:
கொழுக்கட்டை தயாரிக்கும்போது பூரணம் தீர்ந்துவிட்டால், மிச்சமிருக்கும் அரிசி மாவை வீணடிக்காமல் இப்படிச் செய்யலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28908
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பால்கோவா கொழுக்கட்டை




தேவையானவை:
பச்சரிசி மாவு - 200 கிராம், பால்கோவா - 100 கிராம்

செய்முறை: 
ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்து, உள்ளே பால் கோவாவை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு:
கோவாவை கடையில் வாங்குவதைவிட, நாமே பாலை சுண்டக் காய்ச்சி தயாரித்துக் கொள்ளலாம். முந்திரியை அரைத்து சேர்த்துக் கிளறினால் சுவை கூடும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226481
  • Total likes: 28908
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஓட்ஸ்  அவல் கொழுக்கட்டை




தேவையானவை:
பச்சரிசி மாவு - 200 கிராம், பால், ஓட்ஸ், அவல் - தலா ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: 
ஓட்ஸ், அவல் இரண்டையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பொடித்து, பாலுடன் கலந்து கொதிக்கவிடவும். பிறகு, சர்க்கரை ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறி உருட்டி னால்... பூரணம் ரெடி!
ஒரு பங்கு அரிசி மாவுக்கு, முக்கால் பங்கு என்கிற அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, மாவைத் தூவிக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டி சொப்பு செய்யவும். அதனுள்ளே கொஞ்சம் கொஞ்சமாக பூரணத்தை வைத்து மூடி, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.