Author Topic: ~ வயிற்றுக் கோளாறுகளைக் குணப்படுத்தும் சுக்கு ~  (Read 583 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226420
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வயிற்றுக் கோளாறுகளைக் குணப்படுத்தும் சுக்கு




சுக்கு உடலுக்குப் பலத்தையும், நம்புகளுக்கு உற்சாகம் மற்றும் சக்தியையும் தருகிறது. அஜீரணம் மற்றும் வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்தும். மலச் சிக்கலை நீக்குவதுடன் நல்ல கண் பார்வையையும் தரும். விஷங்களை இறக்கும். உடல் வாயுத் தொல்லை, கீழ் வாயுவைக் குணப்படுத்தும். உடல் வலியைப் போக்கும். மற்றும் இருமல், தொண்டை நோய், காய்ச்சல், களைப்பு இவைகளைக் குணப்படுத்தும்.
* நீரில் சுக்கை உரசி நெற்றிப் பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.
* சுக்கை பொடி செய்து அதனுடன் பூண்டுச் சாறு கலந்து சாப்பிட சூலை நோய் குணமாகும்.
* சுக்கை பசு மோர் விட்டு அரைத்துச் சாப்பிட பேதி நிற்கும்.
* சுக்குத் தூளுடன் நீர் கலந்து வெல்லம் கலந்து சாப்பிட பித்தம் வெளியேறும்.
* சுக்கு, மிளகு, வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்து சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
* ஐந்து வீதம் சுக்கு, ஜாதிக்காய், சீரகம், இவைகளை எடுத்து இடித்து உணவுக்கு முன்பு சாப்பிட அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
* சுக்குப் பொடியுடன், பெருங்காயப் பொடி கலந்து சாப்பிட வயிற்றுவலி குணமாகும்.
* 10 கிராம் வீதம் ஓமம், சுக்கு ஆகியவற்றை ஒரு டம்ளர் நீரிலிட்டுக் காய்ச்சி இதில் ஒரு துண்டு பெருங்காயத்தை உரைத்துச் சாப்பிட வயிற்றுவலி நீங்கும்.
* சுக்கு, பெருங்காயம் இரண்டையும் பாலில் உரசி நெற்றிப் பொட்டில் பற்றுப்போட தலைவலி குணமாகும்.
* நல்லெண்ணையில் சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு காய்ச்சி உடல் வலியுள்ள இடங்களில் தடவ உடல் வலி நீங்கும்.
* சுக்குத் தூளை தயிருடன் கலந்து வெல்லம் சேர்த்து காலையில் சாப்பிட பித்தக் கோளாறுகள் அகலும்.
* 5 கிராம் வீதம் சுக்கு, சீரகம், திப்பிலி, மிளகு இவைகளைப் பொடியாக்கி தேன் கலந்து காலை, மாலை சாப்பிட செரியாமை நீங்கிவிடும்.
* சுக்கு, திப்பிலி, வால் மிளகு இவைகளை வகைக்கு 5 வீதம் எடுத்து வறுத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட குரல் இனிமையாகும்.
* ஒரு துண்டு சுக்கு, அதிமதுரம் இரண்டையும் இலேசாக இடித்து வாயில் ஒதுக்கிக் கொண்டு சாறை உறிஞ்சிக் கொண்டேயிருக்க தொண்டைக்கட்டு இருமல் பேன்றவை குணமாகும்.
* சுக்கை உலர வைத்து இடித்து பொடியாக அரைத்து தினசரி காலையில் இந்தப் பொடியால் பல் துலக்கி வர பல் வலி, ஈறு வீக்கம், பல் ஈறில் இரத்தம் வருதல் போன்ற நோய்கள்