Author Topic: ~ ஜாமூன் மஞ்சூரியன் - வாசகிகள் கைமணம்! ~  (Read 402 times)

Offline MysteRy

ஜாமூன் மஞ்சூரியன் - வாசகிகள் கைமணம்!



தேவையானவை:
குலோப் ஜாமூன் மிக்ஸ் - இரண்டு கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4, பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி - ஒரு டேபிள்ஸ்பூன், சில்லி சாஸ், சோள மாவு - தலா 2 டீஸ்பூன், சோயா சாஸ் - ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை:
குலோப் ஜாமூன் மிக்ஸ், 2 டீஸ்பூன் பச்சை மிளகாய், ஒரு கரண்டி அளவு வெங்காயம், ஒரு டீஸ்பூன் இஞ்சி, ஒரு டீஸ்பூன் பூண்டு, உப்பு எல்லாவற்றையும் கலந்து சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும். அதை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதில் மீதியுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு, சில்லி மற்றும் சோயா சாஸ் சேர்த்து, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். சோள மாவை அரை கப் பால் அல்லது தண்ணீரில் கரைத்து சேர்த்து, லேசாக கெட்டியானதும் இறக்கவும். பரிமாறும்போது பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளைச் சேர்க்கவும்.


ஜாமூன் மஞ்சூரியன்:
ஜாமூன் மிக்ஸ் இல்லாவிட்டால், ஒரு கப் பால் பவுடர், அரை கப் மைதாவை சேர்த்து பயன்படுத்தியும் இதைச் செய்யலாம்.