பூத்து குலுங்கும் பூவே,,
என்னை பார்த்து மலர்ந்திடு...
அழகிய நிலவே,,
என்னை காண வந்திடு...
மெல்லிய சாரல் காற்றே,,,
என்மீது மோதிடு...
காலை பனி துளியே,,,
என் மேல் விழுந்திடு...
தத்தி நடக்கும் செல்லமே,,,
முத்தம் பதித்திடு...
அன்பாய் அழைக்கும் அன்னையே,,,
என்னை அணைத்திடு...
உயிர் உருக அழைத்திடும் தந்தையே,,,
என் விரல் பிடித்திடு...
எப்பொழுதும் மறுப்பது போல் நடித்தும்,,,
எனக்காய் இருக்கும் என்னுயிர் தோழியே,,,
உன் வசம் சேர்த்திடு...
உருகி கொண்டே தனிமையில் நான் வாட,,,
தனிமை மட்டுமே வாழ்கையின் அங்கமாய் மாறிட,,,
விதியின் வழியாக தெரிந்திட...
உடைந்து போன நெஞ்சம்,,
கலங்கி நின்று கொஞ்சம்,,
ஏங்குகிறது அனைவரின் நெருக்கத்திர்கே...