உணர்ச்சிகள் மறைந்து
உணர்வுகளால் விரும்பி
உள்ளத்தால் உதிப்பது
காதல்...
அழகுக்கு இங்கே இடமில்லை
அறிவுக்கும் இங்கே இடமில்லை
உணர்ச்சிக்கும் இங்கே இடமில்லை
உள்ளங்களுக்கு மட்டுமே இடமுண்டு
உண்மை காதல் உடல் தேடாது
உள்ளங்கள் மட்டுமே தேடும்
உண்மை உள்ளமும் கிடைத்துவிட்டால்
உலகமும் நம்முள் அடங்கிவிடும்
உறவுகள் அனைத்தும் தயங்கி நிற்கும்
தோல்வியும் அங்கே கண்ணீர் விடும்
உண்மை காதல் உன்னிடம் இருந்தால்
உலகம் மறைந்தும் வாழ்ந்திருக்கும்
ஆம் உலகம் மறைந்தும் வாழ்ந்திருப்போம் நாம்.................