கோதுமை மாவு - ஒன்றரை கப்
ஓட்ஸ் - முக்கால் கப்
தயிர் - அரை கப்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
ஓட்ஸை பொடித்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கோதுமை மாவுடன் பொடித்த ஓட்ஸ், தயிர், பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, தண்ணீர் ஊற்றி ஊத்தப்ப மாவு பதத்திற்கு கரைத்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
ஒரு மணி நேரம் கழித்து மாவுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
பிறகு தவாவை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊத்தப்பமாக ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.
சத்தான, சுவையான கோதுமை ஓட்ஸ் ஊத்தப்பம் தயார். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.