Author Topic: ~ <<<<இனிய இல்லறம்>>>> ~  (Read 1257 times)

Offline MysteRy

~ <<<<இனிய இல்லறம்>>>> ~
« on: September 15, 2013, 12:22:46 PM »
பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு அதிகம்.




தற்போதுள்ள காலகட்டத்தில் ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைபடுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர்.

திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும்போது தான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணை விட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர்.

இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர்தான்.ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்கு உண்டு என்பதைக் காட்டவேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது.

இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது. பெண்கள் ஆண்களை சார்ந்தும், ஆண்கள் பெண்களைச் சார்ந்தும் வாழ்வது தான் உலக நியதி என்பதை இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

Offline MysteRy

Re: ~ <<<<இனிய இல்லறம்>>>> ~
« Reply #1 on: September 15, 2013, 12:25:08 PM »
கணவன் - மனைவி சண்டையை சரி செய்ய வழிகள்




உறவுகளுக்குள் சண்டைகள் வருவது சாதாரண விஷயம். அவ்வாறு வரும் சண்டைகள் தான் அந்த உறவை நீண்ட நாட்கள் நிலைக்க வைக்கும். சண்டை வராத உறவுகளை விட, சண்டை வந்தால் தான் நல்லது என்று நிறைய பேர் சொல்வார்கள். எந்த ஒரு சண்டையும் ஒரு நாளுக்குள் முடிந்துவிட வேண்டும். இவ்வாறு வரும் சண்டையில் ஈகோ இருக்கவே கூடாது.

* வாழ்க்கை துணையுடன் சண்டை போட்டு, ஒரு நாள் முழுவதும் பேசாமல் இருக்கலாம். ஆனால் இரவு வந்தால், அந்த சண்டையை சரிசெய்துவிட வேண்டும். ஏனெனில் இந்த நேரம் தான் இருவரும் அமைதியாக மனம் விட்டு பேச முடியும்.

அதிலும் படுக்கும் போது, துணை கோபமாக இருந்தால், யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து, மற்றவரின் அருகில் சென்று அவர்களை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, அவர்களது கோபத்தை அடக்க வேண்டும். இவ்வாறு செய்தால், யாராக இருந்தாலும் உருகிவிடுவார்கள். அதுமட்டுமின்றி, படுக்கும் போது அவர் தள்ளிப் படுத்தால், அவரைத் தெரியாமல் தொட்டது போன்று தொட்டுவிட்டு, உடனே சாரி என்று சொல்லிப் பாருங்கள்.

* சில நேரங்களில் துணையின் கோபத்தை போக்க ஆச்சரியமான செயல்கள் கூட உதவும். சொல்லப்போனால், ஆரோக்கியமான வாழ்க்கையில் எதிர்பாராதவாறு ஆச்சரியம் கொடுப்பது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, ஒருவர் மற்றவரிடம் நிச்சயம் ஏதாவது ஒன்றை எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளை அவர்கள் கோபமாக இருக்கும் போது செய்தால், அதுவும் சண்டையை மறக்கச் செய்து, காதலை அதிகரிக்கும்.

* சண்டை ஏற்படும் போது இருவருள் ஒருவர் சண்டை போடுவதை தவிர்க்க, அவர்களது மனதை திசைத்திருப்ப ஏதாவது ஒரு வித்தியாசமான மற்றும் அவர்களது ஆர்வத்தை தூண்டும் ஏதாவது ஒரு தலைப்பைப் பற்றி பேச ஆரம்பித்தால், சில சமயங்களில் கோபத்தை மறந்துவிட்டு பேசிவிடுவார்கள். பிறகு என்ன ஒரே சந்தோஷம் தான்.

* சண்டை வந்துவிட்டால், உடனே அந்த சண்டையை நிறுத்துவதற்கு, துணையிடம் மன்னிப்பு கேட்கலாம். அதிலும் வித்தியாசமான முறையில் அவர்களிடம் அந்த மன்னிப்பை வெளிப்படுத்தலாம். உதாரணமாக, பெண்கள் சாரி என்று ஒரு பேப்பரில் எழுதி குளியலறை கண்ணாடியில் மாற்றலாம், ஆண்கள் என்றால் அதேப் போன்று எழுதி சமையலறை, ஃப்ரிட்ஜ் போன்ற இடங்களில் வைக்கலாம். இல்லையெனில் தோப்புக்கர்ணம் போடலாம்.

Offline MysteRy

Re: ~ <<<<இனிய இல்லறம்>>>> ~
« Reply #2 on: September 15, 2013, 12:27:05 PM »
கணவர் தெரிந்து கொள்ள வேண்டிய மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள்:




* உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும். உடனே மிகவும் சந்தோஷமாகி விடுவார்கள்.

* உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும்.

* வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமாவில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.

* காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. அவர்கள் தேவையை அவர்களே பொறுப்பாக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

* விடுமுறை நாட்களில் விரும்பியபடி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

* எந்த ஒரு விஷயத்தையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது.

* சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும். அலுவலம் விடுமுறை தினங்களில் கணவர் சமைக்க வேண்டும் என்று மனைவி விரும்புவார்கள். அன்று ஒரு நாள் மட்டுமாவது சமையலுக்கு விடுமுறை கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

* “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும். எந்த ஒரு விஷயத்திற்கும் கணவர் பாராட்ட வேண்டும் என்று விரும்புவார்கள்.

Offline MysteRy

Re: ~ <<<<இனிய இல்லறம்>>>> ~
« Reply #3 on: September 15, 2013, 12:29:05 PM »
தந்தையாக போகிறீர்களா? இது உங்களுக்காக!!!




கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை.
பிரசவத்தோடு பெண்ணின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுகின்றனவா என்ன? அந்தக் குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா? அப்போ... அப்பாக்களுக்கு? மனைவி கருவுற்றபோதும் பிரசவித்தபோதும் சக நண்பர்களுக்கு 'பார்ட்டி’ கொடுப்பதோடு சரியா?

குழந்தையைப் பெற்றெடுப்பது முதல் பேணிக்காப்பது வரை தாய்க்கு நிகரான பணியைத் தந்தையும் செய்ய வேண்டும்.

மனைவியுடன் கூடவே இருந்து குழந்தையைக் கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பு கணவனுக்கு உண்டு என்றுச் சொல்லும் மகப்பேறு மருத்துவர்கள் மனைவியின் கர்ப்பகாலத்தில் கணவர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும், தந்தையாகப் போகும் தன்னிகரில்லா உறவை, வரவேற்க எப்படிக் காத்திருக்கவேண்டும் என்பதையும் விளக்கினர்.

இந்த விடயத்தில் திருமணம் ஆனதில் இருந்தே ஆண்களின் பங்கும் தொடங்கிவிடுகிறது.

முதலில் தற்போது நமக்குக் குழந்தை அவசியம்தானா என்பதைத் தம்பதிகள் இருவரும் கலந்துபேசி முடிவெடுக்க வேண்டும். தற்போதைக்கு குழந்தை வேண்டாம் என்பது உங்கள் முடிவு என்றால் தகுந்த கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கருவுற்ற பின்பு தொடர்ந்து செக்-அப்கள் செய்வது அவசியம். இதை தேவையற்ற செலவு என்று ஒருபோதும் நினைக்காமல் ஒத்துழைப்பு தரவேண்டியது முக்கியம்.

டொக்டர் சொல்லும் நேரத்தை ஒருபோதும் தவிர்க்காமல், அழைத்துச் செல்லுங்கள். அதைவிட முக்கியமானது, ஒவ்வொரு முறையும் செக்-அப்பிற்கு நீங்களே உடன் இருந்து அழைத்துச் செல்லவேண்டும். ஆபீஸ் வேலையைக் காரணம் காட்டி தப்பிக்காதீர்கள்.

திருமணம் ஆன புதிதில் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில், பிறந்த வீடு அளவுக்கு அந்நியோன்யம் இருக்காது. அதனால் கணவனாகிய நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அந்தப் பெண்ணுக்கு, இதுவும் நம் வீடுதான் என்ற எண்ணத்தை மனதில் ஆழ பதிக்கவேண்டும்.

அந்த அளவுக்கு மனைவிக்கான உரிமைகளையும், பொறுப்புகளையும் வழங்குவது முக்கியம். ஏனெனில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி ஏதாவது சாப்பிடத் தோன்றும் அல்லது பிடித்த தின்பண்டங்களை உண்ணத் தோன்றும்.

விரும்பிக் கேட்கும் பதார்த்தங்களை வாங்கிக் கொடுப்பது சரிதான். அவை தரமானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை எண்ணெய்ப் பதார்த்தங்களை தவிர்த்திடுங்கள்.

அடிக்கடி மனைவியை வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று அவருடன் மனம் விட்டுச் சிரித்துப் பேசி, கொஞ்சி விளையாடுங்கள். இது கர்ப்பக் காலத்தில் அவருக்கு இருக்கும் தேவையற்ற பயத்தைப் போக்க உதவும்.

கர்ப்பம் ஆன முதல் மூன்று மாதங்களில் ஒரு பெண்ணுக்கு எடைக் குறைவு இருப்பது இயல்புதான். அதைப் புரிந்துகொள்ளுங்கள். இதுகுறித்து தேவை இல்லாமல் பயம்வேண்டாம்.

கர்ப்பக் காலத்தில் சில பெண்களுக்குச் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னைகள் இருக்கலாம். உங்கள் துணைக்கு, இந்தப் பிரச்னைகள் இருக்கிறதா என்பதைத் தயக்கம்கொள்ளாமல் கேட்டுத் தெரிந்து, பிரச்னை இருப்பின் அதற்குரிய தீர்வுகள் கிடைக்க வழிவகை செய்யுங்கள்.

எந்த விடயத்திலும் இருவருக்குள்ளும் ஒளிவுமறைவு வேண்டாம்.

கர்ப்பக் காலத்தில் சரியான உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். மனைவி சரியாகச் சாப்பிடுகிறாரா என்பதைக் கவனியுங்கள். நேரம் கிடைக்கும்போது, நீங்களே ஊட்டிவிடுங்கள். அப்போது உங்கள் மனைவி, நிச்சயம் குறைந்தது ஒரு கைப்பிடியாவது அதிகம் சாப்பிடுவார்.

வெவ்வேறு மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றிருந்தாலும் ஒரே இடத்தில் ஆலோசனை பெற்று வந்தாலும் அனைத்து டாக்குமென்ட்களையும் திகதிவாரியாக வைத்துக்கொள்ளுங்கள். இது சரியான சிகிச்சைக்குப் பேருதவியாக இருக்கும்.

மூட நம்பிக்கைகளை ஆதரிக்காதீர்கள். உதாரணமாக 'சித்திரை மாதம் குழந்தை பிறந்தால், மாமனுக்கு ஆகாது’ என்பன போன்ற மூட நம்பிக்கைகளைக் காரணம் காட்டி, சித்திரை மாதம் பிறக்கவேண்டிய குழந்தையை முன்கூட்டியே அறுவைசிகிச்சை செய்து பங்குனி மாதமே வெளியில் எடுப்பார்கள். இது முற்றிலும் தவறானது.

இது முதலில் இரண்டு உயிர்கள் சம்பந்தப்பட்ட விடயம் என்பதை மறவாதீர்கள்.

பிரசவ நேரத்தில் கணவன் அருகில் இருந்தாலே பெண்ணுக்குத் தனி தைரியம் பிறக்கும். அதே சமயம் இதில் அனுபவம் மிக்க பெண் ஒருவரையும் அருகில் இருத்திக்கொள்வதும் மிகவும் நல்லது.

குழந்தை பிறந்த பின்னர் சில பெண்கள், தாய்ப்பால் கொடுக்கக் கூச்சப்படுவார்கள். இந்த நேரத்தில் அருகில் இருந்து, தாய்ப்பாலின் மகத்துவத்தைச் சொல்லி மனைவிக்குப் புரியவைப்பதும், தேவையற்ற கூச்சத்தைப் போக்குவதும் உங்கள் கடமை.

சில குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்ரீதியாகச் சின்ன சின்னப் பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். அந்த நேரங்களில் கணவன், குழந்தையையும் மனைவியையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் ஆரம்பித்து, மருந்து, மாத்திரைகள் சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது வரை எல்லாவற்றிலும் பொறுப்பாகச் செயல்படுங்கள்.

ஒரு குழந்தைக்கும், மறு குழந்தைக்கும் போதுமான இடைவெளி இருக்கவேண்டும். வயிற்றில் அடுத்த குழந்தையைச் சுமக்கும்போது பிறந்த பச்சிளம் குழந்தைப் போதிய கவனிப்பு இல்லாமல் சவலைப் பிள்ளையாகிவிடக்கூடாது.

உளவியல்ரீதியில் பல பயனுள்ள விடயங்களை பார்ப்போம்

திருமணம் ஆனவுடனேயே குழந்தை பெற்றுக்கொண்டாக வேண்டும் என்று இல்லை. உங்களின் விருப்பத்தையும், கடமைகளையும், பொருளாதாரத்தையும் கணக்கில்கொண்டு இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் குழந்தைப் பெறுவதைப்பற்றி முடிவெடுங்கள்.

இல்லையெனில் குழந்தை பிறந்த பின்னர் 'இப்ப நான் குழந்தை கேட்டேனா?’ என்ற வாக்குவாதம் ஏற்படலாம்.

கர்ப்பமான பின்னர், நல்லபடியாகக் குழந்தை பெற்றுக்கொள்வது மனைவியின் வேலை நமக்கு இதில் என்ன இருக்கிறது? என்று இருக்காதீர்கள். குழந்தையை பெற்றெடுப்பதில் இருவருக்குமே சம அளவில் பொறுப்பு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

கர்ப்ப காலத்தில் மனைவிக்கு வாந்தி எடுப்பது, பசியின்மை போன்ற உடல்ரீதியான பிரச்னைகள் ஏற்படும்போது, கணவன் கூடுமானவரை அருகிலேயே இருந்து, அனுசரனையாகப் பேசினால், இந்தப் பிரச்னைகள் அவர்களை மனதளவில் பாதிக்காது.

மனைவியுடன் வாக்கிங் போவது, உணவு ஊட்டிவிடுவது, சிரிக்கச் சிரிக்கப் பேசுவது, நெறிக் கதைகளைச் சொல்வது இதெல்லாம் மற்ற நேரத்தைவிட இந்த நேரத்தில் மிகவும் அவர்களைக் கவரும். இதன் மூலம் உங்கள் மீதான காதலும் பெருகும்.

சில பெண்கள் பிரசவக் காலத்தில் பிறந்த வீட்டிற்குச் செல்வார்கள். சில பெற்றோர்கள் தங்கள் மகளை விரும்பி அழைத்துச் செல்வதில் தவறே இல்லை.

சிலர் வற்புறுத்தி அனுப்பிவைப்பதும் உண்டு. இது தவறு. தன் பெற்றோர்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடி, அந்த பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பது கணவனின் கையில்தான் இருக்கிறது.

குழந்தை பிறந்த சில மாதங்கள் வரை, மனைவி கணவனுடன் செலவிடும் நேரம் குறைவது இயல்பு. குறிப்பாக உடலுறவில் சிறிய இடைவெளி ஏற்படலாம். இதைக் கணவன் சகஜமாக எடுத்துக்கொள்ளவேண்டும். மனைவியை வற்புறுத்தவோ, சண்டை போடவோ செய்யாதீர்கள்.

பொதுவாக வீட்டு வேலைகளை இருவருமே பகிர்ந்துகொள்வது நல்லது. குறைந்தபட்சம் குழந்தை பிறக்கும் காலகட்டத்திலாவது வீட்டு வேலைகளைக் கணவரே செய்யுங்கள். தவறில்லை.

'இது என் குழந்தையும் இல்லை, உன் குழந்தையும் இல்லை; நம் குழந்தை’ என்ற நினைப்பதை இருவருமே உணர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தையின் மனநிலையும் ஆரோக்கியமாக இருக்கும்.

Offline MysteRy

Re: ~ <<<<இனிய இல்லறம்>>>> ~
« Reply #4 on: September 15, 2013, 12:31:39 PM »
“உங்கள் மனைவியின் கோபத்தை குறைக்க இதோ சில டிப்ஸ் …




குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. கணவன்

மனைவி இடையே ஏற்படும் சண்டைகளால் குடும்பங்களே பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான்

கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் குறைக் கூறுகின்றனர். குடும்பத்தில்

மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் பல நேரங்களில் காரணமாகி விடுகின்றனர் என்பது

அவர்களுக்கு புரிவதில்லை.

உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்

உங்கள் இல்லத்தரசியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். நீங்கள் புன்னகை செய்தாலே

அடுத்த நொடியில் கோபத்தை மறந்து விடுவார்கள்

உங்கள் மனைவி தெரியாமல் செய்யும் சிறு சிறு தவறுகளைக் கூட சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி

திட்டாதீர்கள். அவர்கள் தவறு செய்து இருப்பின் நிதானமாக தவறை எடுத்து கூறுங்கள்.

முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது அன்பாய் பேச வேண்டுமே தவிர தொந்தரவு செய்வது போல

மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட

நேரிடும். இதனால் 2 பேரும் டென்ஷன் ஆக வாய்ப்பு அதிகம்.

வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை

கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள

மறக்காதீர்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்வதன் மூலம் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.

மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். வாயினால் தெரிவிக்க கூடாது.

அதனை சற்று கொஞ்சலாகவும் மனைவியை அணைப்பதன் வழியாகவும் நன்றி கூறலாம். ஏதேனும் சிறு

தவறு ஏற்படின் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம்

கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும்

சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால்

மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், ஏதேனும் சில நாட்கள வீட்டிற்கு வரும்போது மல்லிப்பூ

அல்லது அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி வந்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழத்துங்கள்.

நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்லலாம்.

மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம்.

இல்லாவி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ

சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.

கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும்

தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள். மனைவி செய்தவைகள் குறிப்பாக சமையல்

உள்ளிட்டவைகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை

சாதூர்யமாக தெரிவிக்கலாம்.

மற்றவர்கள் முன் மனைவியை கேவலமாக பேசுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால்,

மனைவி தனிமையாக இருப்பதாக உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடலாம். எனவே வீட்டில்

இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும்

பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

சண்டை ஏற்படின் முடிந்தமட்டும் சமாதன கொடியை பறக்கவிட காத்திருக்க வேண்டுமே தவிர, மேலும்

சண்டையை வளர்க்க கூடாது. அன்பை வெளிப்படுத்தினால் மகிழ்ச்சியோடு வாழலாம்.