Author Topic: ~ தமிழில் எழுத சிறந்த ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் எது ? ~  (Read 1642 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226277
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தமிழில் எழுத சிறந்த ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் எது ?

ஆன்ட்ராய்ட் போன்கள் மற்றும் டேப்லெட்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆன்ட்ராய்ட் பயனர்கள் நிறைய பேரின் கேள்வி அதில் எப்படி தமிழில் எழுதுவது, எது சிறந்த அப்ளிகேஷன் ?

கூகுளே ப்ளேயில் இதற்கு நிறைய அப்ளிகேஷன்கள் இருக்கின்றன என்றாலும் மிகச்சில மட்டுமே தமிழில் எழுதுவதற்கு எளிதாக உள்ளன. இவற்றில் KM Keyboard என்ற அப்ளிகேஷன் குறித்து ஏற்கனவே ஒரு பதிவை கற்போமில் எழுதி உள்ளேன். ஆனால் தற்போது அதை விட எளிதான அப்ளிகேஷன்கள் வந்துவிட்டன. அவற்றில் மூன்றை இதில் பார்ப்போம்.





1. Sellinam

தற்போது நான் பயன்படுத்தும் அப்ளிகேஷன் இதுதான். மிக எளிதாக எழுதும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனில் கீபோர்ட் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் உள்ளது. தமிழ் மொழி கீபோர்டை பயன்படுத்தி எழுத விரும்பும் நண்பர்களுக்கு உகந்த அப்ளிகேஷன் இது தான். அதற்கான எழுதுவது கடினமாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம், மிக மிக எளிதாகவே உள்ளது. இதன் இன்னொரு சிறப்பு தமிழில் எழுதும் அதே நேரத்தில் உடனே ஆங்கிலத்துக்கு மாற இடது கீழ் மூலையில் உள்ள “மு/த” என்பதை கிளிக் செய்தால் போதும். அதே போல தான் தமிழுக்கும். குறிப்பிட்ட வார்த்தையை முடிக்கும் முன்பே Dictionary மூலம் அந்த வார்த்தை Suggestion ஆக வருவதும் ஒரு சிறப்பம்சம்.



இதை தரவிறக்க – Sellinam
« Last Edit: September 14, 2013, 12:13:59 PM by MysteRy »

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226277
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

2. Tamil Visai

செல்லினம் போலவே ஒரு சிறந்த அப்ளிகேஷன் இது. டைப் செய்யும் கீபோர்டு நான்கு வகையாக உள்ளன. ஆனால் இதிலேயே ஆங்கிலத்தில் டைப் செய்யும் வசதியும் உள்ளது.  டைப் செய்யும் போது Text தோன்றும் இடம் இரண்டு பகுதிகளாக இருப்பது கொஞ்சம் உறுத்துகிறது. Symbol பகுதியில் மிகக் குறைந்த அளவிலான Symbolகளே உள்ளன.

இதை தரவிறக்க - Tamil Visai

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226277
  • Total likes: 28751
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


3. UKeyboard

UKeyboard appசெல்லினம் போலவே உள்ள இன்னொரு மாற்று கீபோர்டு இது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் தமிழ் மட்டுமின்றி இன்னும் 21 மொழிகளில் எழுதும் வசதி உள்ளது. தமிழில் எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு குறிப்பாக Google Tamil Transliteration பயன்படுத்தி கணினியில் தமிழில் எழுதுபவர்களுக்கு உகந்த Application இது. இதிலும் குறிப்பிட்ட வார்த்தையை முடிக்கும் முன்பே Dictionary மூலம் அந்த வார்த்தை Suggestion ஆக வருகிறது. மீண்டும் ஆங்கிலத்தில் எழுத நீங்கள் Input Method -ஐ தான் மாற்ற வேண்டும். இதன் ஒரு குறை சில சமயம் ஆங்கிலத்தில் எழுதுவது தமிழுக்கு மாறுவது இல்லை.


இதை தரவிறக்க -  Keyboard Beta