வெண்டைக்காய் - 4,
கட்டித் தயிர் - 1 கப்,
மிளகாய் தூள் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
கடுகு, எண்ணெய் - தாளிக்க.
எப்படிச் செய்வது?
வெண்டைக்காயை சிறிதாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பிறகு வெண்டைக்காய் போட்டு வதக்கி, உப்பு, மிளகாய் தூள் சேர்த்துப் பிரட்டவும். வெந்தவுடன் தயிரில் இதைக் கலக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கித் தயிரில் சேர்க்கவும்.