Author Topic: ஃபிஷ் இன் லெமன் சாஸ்  (Read 533 times)

Offline kanmani

ஃபிஷ் இன் லெமன் சாஸ்
« on: September 12, 2013, 11:31:22 AM »

    சால்மன் (அ) வஞ்சிரம் மீன் - 200 கிராம்
    மிளகுத் தூள் - தேவைக்கேற்ப
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
    சாஸ் செய்ய:
    எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
    மிளகுத் தூள் - தேவைக்கேற்ப
    சர்க்கரை (சீனி) - ஒரு தேக்கரண்டி
    எலுமிச்சை தோல் துருவல் (Lemon Zest) - கால் தேக்கரண்டி
    ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    சின்ன வெங்காயம் - 3 (மிகப் பொடியாக நறுக்கியது)
    புதினா - 10 இலைகள் (பொடியாக நறுக்கியது)
    உப்பு - தேவையான அளவு

 

 
   

மீனுடன் மிளகுத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
   

சாஸ் செய்ய கொடுத்துள்ளவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
   

ஃப்ரையிங் பேனில் 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஊற்றி அதில் மீன் துண்டுகளைப் பொரிக்கவும். (மீன் துண்டுகள் வெந்தால் போதுமானது. முறுகலாகி விடக்கூடாது).
   

அடுப்பை அணைத்து விட்டு மீன் துண்டுகளின் மீது கலந்து வைத்துள்ள சாஸை பரவலாக ஊற்றவும்.
   

சுவையான ஃபிஷ் இன் மின்ட் லெமன் சாஸ் தயார்.

 

சாதத்துடன் வேக வைத்த காய்கறிகள் மற்றும் இந்த ஃபிஷ் இன் மின்ட் லெமன் சாஸ் சேர்த்து சாப்பிடலாம். வெஸ்டர்ன் உணவை விரும்புபவர்களுக்கு இதுவும் மிகவும் பிடிக்கும். சால்மன் மீனில் செய்தால் அதிகச் சுவையாக இருக்கும். காரம் இல்லாததால் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.