வெறுத்து வந்தேன் வெகு தூரம்
அன்பாய் கிடைத்தது பல உறவு
அழகாய் போனது பல இரவு
உண்மை முகங்களை நான் காண
தவியாய் தவித்தது என் மனது
எல்லாம் பொய்மை என்று ஆன பின்னே
அன்றே போனது என் உயிரு
எல்லா உலகமும் பொய்மையடி
எல்லா முகங்களும் பொய்மையடி
எல்லா வார்த்தைகளும் பொய்மையடி
எல்லாம் முடிந்தது போல்
என் உள்ளம் இங்கே கொதிக்குதடி
எப்படி இருப்பேன் இவ்வுலகில்
என்றே செல்கிறேன் வான்வெளியில்
அங்கே தரிசனம் தந்தாள் என்னவளும்
அன்போடு அழைத்தால் அவள்தானே
அமைதியாய் அமர்ந்தேன் அவளருகே
அழகாய் பேசினாள் அன்புடனே
துணையாய் என்றும் இருபேன் என்றாளே
தவியாய் தவித்த என் மனது
அடங்கி போனது அவள் மடியில்..............ஆம் அடங்கி தான் போனேன் அவள் ம்னதில்.........