உலர்ந்த அத்திப்பழம் - 10,
வாழைப்பழம் - 2,
பால் - 2 கப்,
லைட் கேரமல் சிரப் (செய்முறை தனியே கொடுக்கப்பட்டுள்ளது) - 2 டேபிள் ஸ்பூன்,
தேன் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
அத்திப்பழத்தைப் பொடிப் பொடியாக நறுக்கவும். அதன் மேல் சில துளிகள் தண்ணீர் தெளித்து, 1 நிமிடத்துக்கு மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்கவும். மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் அத்திப்பழத்தில் சிறிது வெந்நீர் ஊற்றி, கால் மணி நேரம் ஊற வைத்தால், அது மிருதுவாகும்.அதை ஆற விடவும். வாழைப்பழத்தை உரித்து நறுக்கவும். அத்துடன் அத்திப்பழம், குளிர்ந்த பால், கேரமல் சிரப், தேன் எல்லாம் சேர்த்து மிக்சியில் அடித்துக் குளிர்ச்சியாகப் பரிமாறவும்.கேரமல் சிரப்
செய்முறை...
வெறும் கடாயில் 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை மிதமான தீயில் உருக விடவும். உருகி, இளம் சிவப்பாக மாறியதும், அதில் அரை கப் தண்ணீர் விட்டு நன்கு கலக்கவும். பொன்னிறமான கேரமல் சிரப் தயார்.