Author Topic: ஐஸ் பன்  (Read 479 times)

Offline kanmani

ஐஸ் பன்
« on: September 11, 2013, 11:31:06 PM »
என்னென்ன தேவை?

மைதா மாவு - 1/2 கிலோ,
பொடித்த சர்க்கரை 1/4 கிலோ,
டால்டா (அல்லது) நெய் - 50 கிராம்,
தயிர் - 1 டீஸ்பூன்,
சோடா உப்பு - ஒரு சிட்டிகை,
முந்திரி - 50 கிராம்,
வெனிலா எசென்ஸ் சிறிதளவு,
எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது? 

கடாயில் டால்டாவை விட்டு சூடுபடுத்திக் கொள்ளவும். அகலமான தட்டில் மைதா மாவைக் கொட்டி அதனுடன் சூடுபடுத்திய டால்டாவை விட்டு,  தயிர், சோடா உப்பு, வெனிலா எசென்ஸ், வறுத்து உடைத்த முந்திரி சேர்த்து நன்கு பிசையவும். பின்னர் அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக  உருட்டி, சப்பாத்தி கல்லில் போட்டு வட்டமாக தட்டி, சதுர வடிவில் வெட்டிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெட்டி  வைத்துள்ள சதுரத் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து ஆற வைக்கவும். பின்னர் பொடித்த சர்க்கரையில் போட்டுப் புரட்டி எடுத்துப்  பரிமாறவும். பார்ப்பதற்கு ஐஸ் கட்டிகளைப் போல் காட்சியளிக்கும்.