பச்சை வேர்க்கடலை- முக்கால் கப்
அவல்- அரை கப்
பொட்டுக்கடலை மாவு- கால் கப்
பச்சை மிளகாய்- 1
வற்றல் மிளகாய்-1
சோம்பு- அரை ஸ்பூன்
பெருங்காயப் பவுடர்- கால் ஸ்பூன்
அரிந்த கொத்தமல்லி- 3 மேசைக்கரண்டி
பொடியாக அரிந்த கீரை- அரை கப்
பொடியாக அரிந்த வெங்காயம்-1
தேவையான உப்பு
அவலைக் கழுவவும். தண்ணீரை முழுவதுமாக வடித்து, பச்சை வேர்க்கடலை, மிளகாய்கள், சோம்பு, உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். அத்துடன் பொட்டுக்கடலை மாவு, பெருங்காயம், வெங்காயம், கீரைகள், சேர்த்து நன்கு பிசையவும். மெல்லியதாக சிறிய வடைகள் தட்டி மிதமான தீயில்பொன்னிறமாகப் பொரிக்கவும்.