Author Topic: நெத்திலி மீன் பக்கோடா  (Read 486 times)

Offline kanmani

நெத்திலி மீன் பக்கோடா
« on: September 10, 2013, 10:42:32 AM »

    நெத்திலி மீன் - அரை கப்
    பெரிய வெங்காயம் - ஒன்று
    கறிவேப்பிலை - சிறிது
    பச்சை மிளகாய் - ஒன்று
    மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - சிறிது
    உப்பு
    எண்ணெய் - தேவைக்கு
    பஜ்ஜி மாவு - 3 மேசைக்கரண்டி
    அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி

 

 
   

மீனை சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும். இத்துடன் நீளவாட்டில் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக பிரட்டவும்.
   

பஜ்ஜி மாவுடன், அரிசி மாவு, சிறிதளவு உப்பு (மாவில் ஏற்கனவே உப்பு இருக்கும். கவனம் தேவை), மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
   

இந்த மாவை சிறிது சிறிதாக மீனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மீனிலும், வெங்காயத்திலும் வரும் நீரே போதுமானது. தேவைப்பட்டால் சிறிது நீர் தெளித்து பிரட்டவும்.
   

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீனை பக்கோடாவாக போடவும். இரண்டு பக்கமும் திருப்பி விட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
   

சுவையான நெத்திலி மீன் பக்கோடா தயார்.