தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 4 (துண்டுகளாக்கப்பட்டது)
ஆப்பிள் - 3 (துண்டுகளாக்கப்பட்டது)
கோதுமை ரவை - 1/2 கப்
ஓட்ஸ் - 2 கப்
பால் - 1 1/2 லிட்டர்
வெண்ணெய் - 1 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
பட்டை தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருக வைக்க வேண்டும்.
பின்னர் அதில் கோதுமை ரவையை சேர்த்து, பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
அடுத்து அதில் ஓட்ஸ் போட்டு 3 நிமிடம் வறுக்க வேண்டும். பின் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
பிறகு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
இறுதியில் விசிலானது போனதும், அதனை திறந்து அதில் சர்க்கரை, பட்டை தூள் சேர்த்து கிளறி, குளிர வைத்து, பின் அதில் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சூப்பரான வாழைப்பழ ஆப்பிள் கஞ்சி ரெடி!!!