நான் அனைவரையும் விரும்புவதும் ஏனோ?
என்னை அனைவரையும் வெறுப்பதும் ஏனோ?
என்னை சுமந்த அன்னை தெய்வம்...
நான் சிறுபிள்ளையாய் இருந்த போது...
பேசுவாயோ இன்றாவது?
என்று என்னை கேட்டது...
இன்று பேசாமல் செல்லடி என்று என்னை வெறுத்து ஒதுக்கி விட்டது....
செல்லமாய் அழைத்த என் தந்தையோ,,,
இன்று என்னை விரோதியாய் பார்ப்பதும் ஏனோ?
என்னை தன் அன்பு தோழியாய்..
நினைத்த என் தோழமைகளும்,,,
என்னை தொல்லையாய் பார்ப்பதும் ஏனோ??
எனக்காக இருக்கும் என்னவனே...!
உன்னை காயபடுத்த என் மனம் விரும்பவில்லையே...
அதனால் என்னை விட்டு செல்வாயோ என் அன்பே...
இருக்கும் ஒவ்வொரு துளி நிமிடமும்
தனிமையில் நான் வருட...
என் மனமே என்னை சிறு நொடிகளில் வெறுத்து விடுமோ..!
உயிர் உருகும் ஓசை இதுவோ..
கண்ணில் இன்று வேற்பதும்,,
மனத்தால் இன்று வாடுவதும்,,,
உயிரோடு புதைந்து கொண்டிருக்கும் கணங்களோ!!!