Author Topic: பீனட் பட்டர் & ஜெல்லி சாண்ட்விச்/Peanut butter&Jelly sandwich  (Read 400 times)

Offline kanmani

தேவையானவை:

ப்ரெட்/Bread_ஒரு நபருக்கு 2 துண்டுகள்/slices
பீனட் பட்டர்/Peanut butter_தேவைக்கு
ஸ்ட்ராபெர்ரி ஜாம்/Strawberry jam_தேவைக்கு

IMG_4799

Peanut butter ஐ செலக்ட் பண்ணும்போது க்ரீமியாக/creamy இல்லாமல் க்ரஞ்சியாக/crunchy தெரிவு செய்தால் சாப்பிடும்போது நன்றாக‌ இருக்கும்.உங்கள் விருப்பம்போல் எந்த ஜாமையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதற்கு brown bread ஐவிட  white bread இன்னும் சுவையாக இருக்கும்.

செய்முறை:

இரண்டு ப்ரெட் துண்டுகளை எடுத்துக்கொண்டு ஒன்றில் பீனட் பட்டரையும், மற்றொன்றில் ஸ்ட்ராபெர்ரி ஜாமையும்,



கீழே படத்திலுள்ளதுபோல் ப்ரெட் தூண்டுகளின் மேல் முழுவதும் தடவி விட்டு,



இரண்டையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து அழுத்திவிட்டு,



ஒரு கத்தியின் உதவியால் முக்கோண வடிவில் நறுக்கவும்.



இப்போது இனிப்புடன் கூடிய,சுவையான ப்ரெட் சாண்ட்விச் சாப்பிடத் தயார்.பிறகென்ன,எடுத்து சாப்பிட வேண்டியதுதான்.