உன்னிடம் சொல்ல முடியாத செய்திகள்
என் சுவாசத்தை கடினமாக்குகின்றன.
உன் வருகை தாமதத்தால்
நான் மனம் வருந்தவில்லை
என் நினைவு மூட்டைகளை
சுமந்து நடப்பது
சிரமமென்று எனக்கு தெரியும்
எப்போது வீழ்ந்தாலும்
எப்படி வீழ்ந்தாலும்
பற்றி எழுவதென்னவோ
உன் நினைவுகளில் மட்டும்தான்