Author Topic: சுரைக்காய் பாத்  (Read 651 times)

Offline kanmani

சுரைக்காய் பாத்
« on: September 07, 2013, 04:39:23 PM »
ன்னென்ன தேவை?

தோல் நீக்கி, பொடியாக நறுக்கிய சுரைக்காய் - 1 கப்,
கொழுப்பு நீக்கிய தயிர்- சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க....

கடுகு, பெருங்காயம்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய்.
எப்படிச் செய்வது?

சுரைக்காயை இட்லித் தட்டில் வைத்து வேக வைக்கவும். தயிரில் தாளிப்புப் பொருள் களைச் சேர்த்து, சுரைக்காய் கலவையில் கொட்டி, உப்பு சேர்த்து  நன்கு கலந்து பரிமாறவும். உடல் பருமன் பிரச்னை உள்ளவர்களுக்கு அரிசி உணவு வேண்டாம் என அறிவுறுத்துவோம். ‘கொஞ்சம் தயிர்சாதமாவது  சாப்பிடலாமா’ என்று கேட்பார்கள். தயிர்சாதப் பிரியர்களுக்கு இந்த சுரைக்காய் பாத் சரியான மாற்று. ஒரு சப்பாத்தியும், ஒரு கப் சுரைக்காய் பாத்தும்  எடுத்துக் கொள்ளலாம்.