Author Topic: வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்  (Read 455 times)

Offline kanmani

வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்
« on: September 06, 2013, 04:40:34 AM »
தேவையானவை:

நறுக்கிய காய்கறிகள் (எல்லாம் சேர்த்து வேக வைத்தது), நூடுல்ஸ் – தலா ஒரு கப் (வேக வைக்கவும்), காய்கறி வேக வைத்த தண்ணீர் – 4 கப், வெங்காயம் – ஒன்று, மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, பூண்டு – ஒரு பல், வெங்காயத்தாள் – ஒன்று (நறுக்கியது), நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு, வெண்ணெய், சோள மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் வெண்ணெயை போட்டு, உருகியதும் நறுக்கிய பூண்டை போட்டு வதக்கி, அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மேலும் வதக்கி… காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதி வந்தவுடன், உப்பு, மிளகுத்தூள், வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்க்கவும். தேவைப்பட்டால் அஜினோமோட்டோ சேர்த்து கொதிக்கவிடவும். இதில் சோள மாவை கரைத்து ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கி, கப்பில் ஊற்றி… கொத்தமல்லி தழை, சோயா சாஸ், வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.