தேவையானவை:
பச்சைப் பட்டாணி – கால் கிலோ, வெங்காயம் – ஒன்று, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், காய்கறி வேக வைத்த தண்ணீர், கிரீம், பால் – தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பச்சைப் பட்டாணி, வெங்காயம் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து, சோள மாவை பாலில் கரைத்து ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதில் உப்பு, மிளகுத்தூள், கரம்மசலாத்தூள் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, சூப் கப்பில் ஊற்றி, மேலே கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.