தேவையான பொருட்கள்:
முளைக்கட்டிய பச்சைப்பயறு - 1 கப்
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1/2 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
ப்ளாக் உப்பு - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் முளைக்கட்டிய பச்சைப்பயறை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின், உப்பு, ப்ளாக் உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து ஸ்பூன் கொண்டு நன்கு கிளறி விட வேண்டும். இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி, நீண்ட நேரம் ஊற வைக்காமல் உடனே சாப்பிட வேண்டும்.
இப்போது சூப்பரான மற்றும் ஆரோக்கியமான முளைக்கட்டிய பச்சைப்பயறு மசாலா!!!
குறிப்பு: தற்போது முளைக்கட்டிய பச்சைப்பயறு கடைகளில் விற்கப்படுகிறது. அதைக்கூட வாங்கி பயன்படுத்தலாம்.