Author Topic: கம்பு ஆலு சப்பாத்தி  (Read 429 times)

Offline kanmani

கம்பு ஆலு சப்பாத்தி
« on: September 04, 2013, 09:55:36 PM »
தேவையான பொருட்கள்:

கம்பு மாவு - 2 கப்
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:


முதலில் ஒரு பௌலில் கம்பு மாவு, உருளைக்கிழங்கு, வெங்காயம், தேங்காய், பச்சை மிளகாய், மாங்காய் தூள், உப்பு ஆகியவற்றை போட்டு, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், ஒவ்வொரு சப்பாத்திகளையும் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது சூப்பரான கம்பு ஆலு ரொட்டி ரெடி!!! இதனை அப்படியே சாப்பிடலாம்.