Author Topic: ஃபுரூட் டீ  (Read 484 times)

Offline kanmani

ஃபுரூட் டீ
« on: September 04, 2013, 09:51:07 PM »
தேவையான பொருட்கள்:

க்ரீன் டீ பேக் - 2
தண்ணீர் - 1 1/2 கப்
ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்
தேன் - 1 கப்
எலுமிச்சை ஜூஸ் - 1/2 கப்
இஞ்சி சாறு - 1/2 டீஸ்பூன்
ஐஸ் கட்டி - 3-4

செய்முறை:

முதலில் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, அந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் க்ரீன் பேக்குகளை டீயின் நிறம் வரும் வரை ஊற வைத்து, குளிர வைக்க வேண்டும்.

பின்னர் அதில் ஆரஞ்சு ஜூஸ், தேன், எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

 பின்பு அதனை டம்ளரில் ஊற்றி, அதில் ஐஸ் கட்டிகளைப் போட்டு பரிமாறினால், சூப்பரான ஃபுரூட் டீ ரெடி!!!