தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
தயிர் - 3-4 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 250 கிராம்
செய்முறை:
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து, பாதியாக சுண்ட வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் தயிர் மற்றும் சர்க்கரையைப் போட்டு, உருக வைக்க வேண்டும். எப்போது சர்க்கரையானது உருகிவிட்டதோ, அப்போது பாலை அத்துடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதனை ஓரளவு சுண்ட விட்டு, ஒரு பானையில் ஊற்றி, சுத்தமான துணியால் மூடி, தனியாக 3-4 மணிநேரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை எடுத்து சாப்பிட்டால், இனிப்பான மிஸ்டி தோய் ரெசிபி ரெடி!