Author Topic: ~ செல்போன்களால் கதிர்வீச்சு ஏற்படும்...தீர்வு என்ன? ~  (Read 1090 times)

Offline MysteRy

செல்போன்களால் கதிர்வீச்சு ஏற்படும்...தீர்வு என்ன?

செல்போன்களால் கதிர்வீச்சு ஏற்படும் என்பதை தெரிந்தும் நாம் அனைவரும் அந்த சாதனத்தை பயன்படுத்துகிறோம். செல்போன் போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால் தேவைகள் மட்டும் அல்லாமல் இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தான் போகின்றன என்கிறது பல்வேறு ஆய்வு முடிவுகள்.

செல்போன்களை எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டாலே பல பாதிப்புகளை குறைந்தபட்சம் தவிர்க்கலாம். உங்களுக்காக சில தகவல்கள்...



செல்போன் கதிர்வீச்சு: தீர்வு



குழந்தைகள் பெரியவர்களைவிட செல்போன்களை மிக எளிதாக பயன்படுத்துவதை பார்த்து பெருமை கொள்ளும் பெற்றோர்கள் நிச்சயம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வெகு அதிகமாக குழந்தைகளை பாதிக்கும்.

Offline MysteRy

செல்போன் கதிர்வீச்சு: தீர்வு



சில கிராமப்புற பகுதிகளில் சரியாக நெட்வொர்க் கிடைப்பதில்லை. இது போன்று சரியாக சிக்னல் கிடைக்காத பகுதிகளில் செல்போன் பயன்படுத்தும் போது, கதிர்வீச்சின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

Offline MysteRy

செல்போன் கதிர்வீச்சு: தீர்வு



தூங்கும் போது செல்போனை பக்கத்திலேயே வைத்து கொண்டு தூங்குபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். இந்த பழக்கத்தினை ஆரம்ப காலத்திலேயே தவிர்த்து கொள்வது சரியான ஒன்று.

Offline MysteRy

செல்போன் கதிர்வீச்சு: தீர்வு



மற்றவர்களுக்கு பேசும் போது, எதிர் முனையில் பேசுபவர்கள் அழைப்பை எடுத்த பின், காதில் வைத்து பேசுவது நல்லது. ஏனெனில் பேசும் போது ஏற்படும் கதிர்வீச்சைவிட, ரிங்டோன் போகும் பொழுது 14 மடங்கு அதிகம் கதிரவீச்சுகள் வெளிப்படுகிறது.

Offline MysteRy

செல்போன் கதிர்வீச்சு: தீர்வு



முக்கியமாக வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதை தவிர்க்கவும். இது போன்று வைப்ரேட் மோடில் வைத்து, சட்டை பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் அதிகம் தாக்குகின்றன.

Offline MysteRy

செல்போன் கதிர்வீச்சு: தீர்வு



பொதுவாக வலது காதில் வைத்து மொபைல் பேசும் போது மூளை நேரடியாக பாதிக்கும். இதனால் இடது பக்க காதில் வைத்து பேசினால் இதன் பாதிப்பை குறைக்கலாம்.

Offline MysteRy

செல்போன் கதிர்வீச்சு: தீர்வு



பயணங்களில் பொழுதுபோக்காக நிறைய பேர் கேம்கள் விளையாடுவது வழக்கம். இப்படி பயணங்களில் உற்றுபார்த்து ஒரு வேலையை செய்வதன் மூலம் கண்கள் எளிதாக பாதிக்கப்படும்.