Author Topic: மெரிங்கு (Meringue)  (Read 464 times)

Offline kanmani

மெரிங்கு (Meringue)
« on: September 03, 2013, 11:56:42 PM »


    முட்டை - 2 (வெள்ளைக்கரு மட்டும்)
    சீனி - 125 கிராம்
    ரோஸ் ஃபுட் கலர் - சிறிது
    ரோஸ் எசன்ஸ் (அ) ரோஸ் வாட்டர் - சிறிது
    எலுமிச்சை சாறு - சில துளிகள்

 

 
   

ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை போட்டு, அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு ஊற்றவும். எலுமிச்சை சாறு சேர்ப்பதால் பளபளப்பான வெண்மை கிடைக்கும்.
   

இதை பீட்டரினால் நன்கு நுரை வரும் வரை அடிக்கவும். பாத்திரத்தை தலை கீழாக கவிழ்த்தால் நுரைத்த வெள்ளைக்கரு கீழே கொட்டாமல் இருக்கவேண்டும். இதுதான் சரியான பதம்.
   

அதனுடன் சீனியைச் சேர்த்து மீண்டும் 2 நிமிடங்கள் பீட்டரால் அடிக்கவும்.
   

பிறகு ரோஸ் கலர் மற்றும் எசன்ஸ் சேர்த்து மீண்டும் அடிக்கவும்.
   

இந்தக் கலவையை பைப்பிங் பேகில் போட்டுக் கொள்ளவும். அவன் ட்ரேயில் வாக்ஸ் பேப்பரைப் போட்டு, அதில் இப்படி பூ வடிவில் வைக்கவும்.
   

இதை 90° சூட்டில் ஒரு மணி நேரம் அவனில் வைத்தெடுக்கவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மெரிங்கு ரெடி. இது மொறுமொறுப்பாகவும், சுவையில் மிட்டாய் போன்றும் இருக்கும்.