Author Topic: ~ இளமையை திரும்பத்தரும் பப்பாளி! ! ! ! ~  (Read 496 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226403
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இளமையை திரும்பத்தரும் பப்பாளி! ! ! !




வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது.

பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லைக் கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.

மேலும்- நரம்புகள் பலப்படவும், ஆண்மைத் தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடலாம்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களைத் தாக்காது.

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளைக் கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

பப்பாளி ஒரு அருமையான சத்துள்ள இயற்கை மருத்துவ குணமுள்ள கனி. இக்கனியில் அளவுக்கு அதிகமான வைட்டமின் C, வைட்டமின் A , ஃபோலட்(Folate) , நார்ச்சத்து (Fiber) வைட்டமின் E உள்ளது.

பப்பாளி வெயில் காலத்தில் மட்டும்தான் பழுக்கும். பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் (Paraoxonase) என்ற தாதுப்பொருள்கொலஸ்டரால் (Cholesterol) குறைக்க உதவுகிறது. இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் E Colon Cancer வராமல் தடுக்கிறது.

கிட்னியில் கல் இருப்பவர்கள் இந்த பழத்தை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம்.

மிக மிக மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பழம்.

அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.

சில பேருக்கு அதிக ப்ரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பலத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்கவைக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, இந்தப் பழம் ஒரு அருமையான மருந்து.

இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்(Constipation) விரைவில் குணமாகும்.

இந்த பழத்தின் தோல் முகத்திற்கு ரொம்ப நல்லது.

வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளப்பளப்பாக இருக்கும்.

பப்பாளியில் பப்பைன் (Papain) என்ற தாது பொருள் உள்ளது. இந்த பப்பைன் மேலை நாடுகளில் மாட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சிகளை பதப்படுத்த (Preservative) உபயோகிக்கிறார்கள்.

பப்பாளி பழம் உடலை வெப்பப்படுத்தி சற்று சூடுபடுத்தக்கூடியதால் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள்
இந்தப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

நம் கிராமத்தில் இந்த பழம் வீட்டுக்கு வீடு இருக்கும்.

ஆனால் நாம் இவற்றைச் சீண்டிக்கூடப் பார்ப்பதில்லை.

அதை அணில் மற்றும் பறவைகள்தான் சாப்பிட்டு, மிகவும் தெம்பாகவும், சுறுசுறுப்பாகவும்இங்கும் அங்கும் ஓடி விளையாடும்.

இயற்கையாக கிடைக்கும் பழத்தை விட்டுவிட்டு கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடுகிறோம்.

இந்த பழத்துக்கு மேலை நாடுகளில் நல்ல வரவேற்பு..

சத்துள்ள பழங்களை உண்போம்..!
.......................................................
நோயின்றி வாழ்வோம்..!!
..............................................

நன்றி!!!!!!