Author Topic: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~  (Read 1371 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227447
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
எளிய இயற்கை வைத்தியம்:-




மாமரத்துப் பிசினை ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். இதை இரவு படுக்கப்போகும் முன் காலிலுள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் சில நாட்களில் பித்த வெடிப்பு சரியாகும்.

கசகசாவை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து அடிக்கடி தடவி வந்தால் சில தினங்களில் உடல் சருமத்தில் தோன்றும் கரும்படை மாறி தோல் இயற்கை நிறம் பெறும்.

வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. கருப்பாக, பளபளப்பாக இருக்கும்.

மருதோன்றி இலையை அரைத்து தலையில் ஒரு மணி நேரம் கட்டி வைத்து பின் தலை முழுகினால் கண் சிவப்பு நீங்கும்.

பல் கூச்சம் விலக வேண்டுமா? கொய்யா இலையை மென்று வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும்.

காதில் பூச்சி அல்லது எறும்பு புகுந்துவிட்டால் தண்ணீரில் உப்பைக் கரைத்து காதில் ஊற்ற அவை வெளியேறும்.

கண் வலிக்கு நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒற்றிக்கொள்ளவும்.

தூதுவேளை வேரையும் அருகம் புல்லையும் கசக்கி துணியில் வைத்து பல்வலி இடது புறமிருந்தால் வலது காதிலும், வலது புறமிருந்தால் இடது காதிலும் மூன்று சொட்டுக்கள் மட்டும் பிழிய வலி உடனே நிற்கும்.

பல் வலியா? புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து கால் பங்கு உப்பு சேர்த்துப்பல் துலக்கவும்.

பச்சை வாழைப் பழத்தை உண்ண விக்கல் விலகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227447
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
« Reply #1 on: September 01, 2013, 11:31:37 PM »
எளிய இயற்கை வைத்தியம்:-




பித்தவெடிப்பு மறைய

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227447
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
« Reply #2 on: September 23, 2013, 12:04:38 PM »
எளிய இயற்கை வைத்தியம்:-




* வெற்றிலையைப் பிழிந்து சாறு எடுத்து, தேன் கலந்து அருந்த இருமல் குணமாகும்.

* முருங்கைப்பிஞ்சு உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.

* சித்தரத்தையை துவரங்கொட்டை அளவு வாயில் போட்டு சுவைத்து தண்ணீர் குடித்தால் வறட்சியான இருமல், சீதளநோய், வாந்தி, குமட்டல் போகும்.

* நீர்முள்ளி விதைகளை மோருடன் கலந்து அருந்தி வர நாட்பட்ட கழிச்சல் குணமாகும்.

* வாடாத பன்னீர் ரோஜா பூவை கைப்பிடி இருவேளை சாப்பிட்டால் சீதபேதி வயிற்றுக்கடுப்பு மூலச்சூடு குணமாகும்.

* குங்குமம் பூவை நசுக்கி நெற்றியில் பற்றுப் போட தலைவலி தீரும்.

* அகத்திக் கொழுந்தை கைப்பிடி அளவு காலையில் தின்று வர வாய்ப்புண், வாய்நாற்றம் மாறும்.

* சிற்றாமணக்கு விதையை அரைத்து தீப்புண்கள் மேல் பூசிவர தீப்புண்கள் ஆறும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227447
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
« Reply #3 on: November 10, 2013, 04:43:50 PM »
எளிய இயற்கை வைத்தியம்:-




1. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

2. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

3. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

4. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

5. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

6. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

7. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

8. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

9. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
எளிய இயற்கை வைத்தியம்:-

1. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

2. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

3. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

4. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

5. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

6. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

7. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

8. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

9. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227447
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
« Reply #4 on: November 10, 2013, 06:14:09 PM »
எளிய இயற்கை வைத்தியம்:-




* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

* இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.

* நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

* பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

* படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227447
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
« Reply #5 on: November 14, 2013, 04:40:58 PM »
எளிய இயற்கை வைத்தியம்:-




* தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று தின்று வந்தால் தொண்டையில் சதை ஏற்படாமல் தடுக்கும். தொண்டைப்புண்ணும் ஆறும்.

* காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் ரத்தசோகை நோய்க்கு மருந்தே தேவையில்லை.

* பெருங்காயத்தைத் தினமும் ஒருவேளையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். வாயுவை வெளியேற்றுவதில் பெருங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது.

* கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு மட்டும் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

* விவசாயிகளுக்கும், சலவைத் தொழிலாளிகளுக்கும் தண்­ணீரில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கும் காலில் சாதாரணமாக வரக்கூடியது சேற்றுப்புண். இதை குணமாக்க, கால்களை ஈரம் போகத் துடைத்துவிட்டு, மஞ்சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் போதும். சேற்றுப்புண் ஆறிவிடும்.

* சிலருக்கு தோல் நோய்கள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். அவர்கள், கொத்தமல்லி இலையை நன்றாக அரைத்து அந்த சொரசொரப்பான இடத்தின் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே நல்ல குணம் பெறலாம். சொரசொரப்பான தோலும் மிருதுவாகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227447
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
« Reply #6 on: November 24, 2013, 07:24:21 PM »
எளிய இயற்கை வைத்தியம்:-




ஞாபக சக்தி:

வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம், பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட ஞாபகசக்தி பெருகும். வல்லாரை கீரையை அடிக்கடி சமைத்து உண்டு வந்தாலும் நினைவாற்றல் அதிகரிக்கும்.

வல்லாரை இலை தூள் 100 கிராம், வசம்பு 15 கிராம் இடித்து தூள் செய்து ஒன்றாக கலந்து தினசரி 5 கிராம் தேனுடன் சாப்பிட்டு வந்தால் மந்தபுத்தி மாறும்.

நாள்தோறும் பெரிய நெல்லி ஒன்றை தவறாமல் உண்டு வந்தால் நம் மூளை நல்ல நிலையில் இயங்கும். பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட்டால் மூளை பலம் பெறும். உடலுக்குப் பலம் கொடுக்கும்.

பாதாம்பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, மாதுளம்பழம் இவைகளை தினமும் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, எலும்பு வளர்ச்சி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும்.



காச நோய்க்கு மிளகு வைத்தியம்:

காசநோய் தீர மிளகு வைத்தியம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதாவது, தேள் கொடுக்கு இலை, பூ ஆகியவற்றை சிறிது சீரகம், 6 மிளகுடன் அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதனை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து ஆட்டுப்பால் விட்டு குடிக்க வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று 48 நாட்கள் சாப்பிட்டு வர காச நோய் குணமாகும்.

இம்மருந்தை உண்ணும் போது புகைப்பிடித்தல், மது, காபி, டீ அருந்துதல் போன்றவைகளைத் நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும்.



மேக நோய்க்கும், நீரிழிவுக்கும் ஏற்றது:

மேக நோய்க்கும், நீரிழிவு நோய்க்கும் புங்கம் பூவில் தயாரிக்கப்படும் மருந்து மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. அதாவது, புங்கம் பூவை நிழலில் உலர்த்தி நெய்விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இதனை இடித்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இந்த தூளை 1 அல்லது 2 கிராம் அளவு தேனில் கலந்து காலை, மாலை இருவேளையும் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர வேண்டும். இப்படி செய்தால் எவ்வளவு கடுமையான மேக நோயாக இருந்தாலும் குணமாகிவிடும்.

இந்த மருந்தை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227447
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
« Reply #7 on: November 29, 2013, 09:53:39 PM »
எளிய இயற்கை வைத்தியம்:-




* சிறிது தண்ணீ­ரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டிகொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

* தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.

* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227447
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
« Reply #8 on: December 19, 2013, 09:04:00 PM »
எளிய இயற்கை வைத்தியம்:-




* தாழம்பூ சர்பத் செய்து மாதம் இருமுறை சாப்பிட அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.

* ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

* வாழைப்பூவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

* ஒத்த நந்தியாவட்டையை கண்களின் மீது வைத்து வந்தால் கண் எரிச்சல் குணமாகும். குளிர்ச்சியடையும்.

* மருதோன்றி பூவை இரண்டு நாள் இரவில் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

* தாமரை இதழை தினமும் ஒன்று சாப்பிட்டால் பேசும் திறன் அதிகரிக்கும்.

* தென்னம்பூவை வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் உள்ரணம் குணமடையும்.

* ஆவாரம் பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு பலம் கூடும்.

* செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியடையும்.

* மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க வயிற்றுக்கடுப்பு குணமாகும்.

* வில்வப் பூக்களை புளி சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிட்டு வர குடல் வலிமை பெறும்.

* உலர்ந்த மாம்பூ, சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட உஷ்ணபேதி குணமாகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227447
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ எளிய இயற்கை வைத்தியம்:- ~
« Reply #9 on: December 28, 2013, 08:31:31 PM »
எளிய இயற்கை வைத்தியம்:-




1. நெஞ்சுவலி வந்தவுடன் ஒரு கரண்டி சுத்தமான தேன் உட்கொள்ள, வலி வந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.



2. மிளகுக் கஷாயத்துடன் தேனைக் கலந்து உட்கொள்ள அஜீரணம் குணமாகும்.



3. குழந்தைகள் சளி, ஜலதோஷத்தால் அவதிப்பட்டால் மாதுளம் பழச்சாறுடன் சிறிது தேனைக் கலந்து கொடுக்கவும்.



4. குப்பைமேனி இலையின் சாறுடன் தேனைக் கலந்து கட்டிகளின் மீது தடவினால் கட்டிகள் உடைந்து குணமாகும்.



5. நெருப்பு காயத்திற்கு தேன் உகந்தது.



6. உணவு உண்டவுடன் ஒரு கரண்டித் தேன் அருந்தினால் உடல் சீராக இருக்கும். உடல் பருக்க இரவு படுக்குமுன் பாலுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும்.



7. விளாம்பழச்சாறும், தேனும் இருமலை நிறுத்தும்.



8. வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வெந்தயத்துடன் அரை கப் தயிர் குடித்தால் உஷ்ணம் தணிந்து மலச்சிக்கல் ஏற்படாது. நீராகாரமும், வெந்தயமும் தினம் காலையில் அருந்துவதும் நல்லது.



9. குளவி கொட்டிய இடத்தில் சுண்ணாம்பு அல்லது வெங்காயத்தை தடவவும்.



10. கடுகு, மஞ்சள், ஓமம் முதலியவற்றை அரைத்து, நகச்சுற்றின் மேல் கட்டினால் வலி குறையும்.



11. வாய்ப்புண்ணுக்கு கடுக்காயை வாயில் ஒதுக்கிவைக்க புண் விரைவில் ஆறும்.



12. கால் வெடிப்பு உள்ளவர்கள், குளிக்கும் போது காலை தேய்த்துக் குளிக்கவும். மஞ்சள் தேய்த்துக் குளித்தால் கால் வழுவழுப்பாக ஆகிவிடும்.