Author Topic: வெள்ளரிக்காய் ஊறுகாய்  (Read 529 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் - 3

வினிகர் - 2 தேக்கரண்டி

சோயா ஸாஸ் - 4 தேக்கரண்டி

சர்க்கரை - 1தேக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை

வெள்ளரிக்காயை கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில், சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின் வெள்ளரித் துண்டுகளின்மேல் உப்பை தூவி முப்பது நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதற்கிடையில் சோயா ஸாஸ், வினிகர், சர்க்கரை இவைகளை ஒன்றாகக் கலந்து அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வைக்க வேண்டும்.

முப்பது நிமிடம் கழித்து வெள்ளரித்துண்டுகளை உப்பு போக கழுவிவிட வேண்டும். பின் கழுவிய வெள்ளரித்துண்டுகளை தயாராக வைத்திருக்கும் கரைசலில் சேர்க்க வேண்டும். இதனை ஒரு வாரம் வரை ப்ரிஜில் வைத்து பின் எடுத்து உபயோகிக்க வேண்டும்.